3வது ஆஸி டெஸ்ட்.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. 2 மாற்றங்கள் நடக்குமா.. பும்ரா ஆடுவாரா?

0
1979

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை மறுநாள் துவங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய பிளேயிங் லெவன் எப்படி அமையலாம்? என்பது குறித்து பார்க்கலாம்.

தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட்டு வருகிறது. இதில் நடைபெற்ற முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 2 அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று தொடர் சமநிலையில் இருக்கிறது. இந்த நிலையில் நாளை மறுநாள் மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இரண்டு அணிக்கும் சாதகமான நிலைமை

மூன்றாவது போட்டி நடைபெற இருக்கும் காபா மைதானம் ஆஸ்திரேலியா அணிக்கு மிகவும் சாதகமான புள்ளி விபரங்களை கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் அந்த மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய ஒரே அணியாக இந்திய அணி இருக்கிறது. கடந்த முறை ரிஷப் பண்ட், கில், புஜாரா இந்த மைதானத்தில் மிகச் சிறப்பாக விளையாடி தொடரை வெல்லம் முக்கிய காரணமாக இருந்தார்கள்.

மேலும் இந்த போட்டியை பொறுத்தவரையில் இந்திய பேட்டிங் வரிசையை மாற்ற மாட்டார்கள் என்று தெரிகிறது. பயிற்சியில் ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் இணைந்து வந்தார்கள். அவர்கள் தொடக்க வீரர்களாகவே ஜோடியாக பயிற்சி பெற்றார்கள். எனவே ரோகித் சர்மா மீண்டும் ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்வது உறுதியாக இருக்கிறது.

- Advertisement -

பும்ரா விளையாடுவது உறுதியா?

இப்போது வரையில் பும்ரா மூன்றாவது டெஸ்டில் விளையாடுவாரா? என்பது உறுதியற்ற நிலையில் இருக்கிறது. மேலும் சமி வந்தாலும் நான்காவது டெஸ்டில் தான் விளையாடுவார் என்று தெரிகிறது. ஒருவேளை பும்ரா விளையாடாவிட்டால் ஆகாஷ் தீப் விளையாடுவார். மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இவர் ஹர்ஷித் ராணா இடத்தில் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

இத்துடன் இந்திய பேட்டிங் வரிசையை வலிமைப்படுத்த இந்திய கிரிக்கெட் நிர்வாகம் விரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வினை நீக்கி விட்டு மீண்டும் வாஷிங்டன் சுந்தரை கொண்டுவர செய்யலாம் என்று நம்பப்படுகிறது. எனவே ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஹர்ஷித்ராணா நீக்கப்பட்டு, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஆகாஷ் தீப் அணியில் சேர்க்கப்படுவார்கள் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

இதையும் படிங்க :1 ஓவருக்கு.. 13 பந்துகள் வீசிய ஆப்கானிஸ்தான் வீரர்.. டி20 போட்டியில் வினோத சம்பவம்.. ஜிம்பாப்வே அணி திரில் வெற்றி

உத்தேச இந்திய பிளேயிங் லெவன் :

ஜெய்ஸ்வால், கேஎல்.ராகுல் சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், ரோஹித் சர்மா, நிதீஷ் குமார், வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், பும்ரா மற்றும் சிராஜ்.

- Advertisement -