ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் நட்சத்திர இளம் வீரர் ஜெய்ப்பூர் மான்சவாய் மைதானத்தில் மற்ற இடங்களில் எடுப்பது போல பெரிய ரன்கள் எடுக்க முடியாது எனவும், அதற்கு தாங்கள் எப்படி தயாராகி வருகிறோம் என்பது குறித்தும் பேசியிருக்கிறார்.
இந்த முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களை தக்க வைத்ததில் சில தவறுகளை செய்த காரணத்தினால் ஐபிஎல் தொடரில் போராடி வருகிறது. தற்போது தங்களது சொந்த மைதானத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
கடந்த வருடத்தின் ஹீரோ
கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த சங்கக்கரா ரியான் பராக் தொடர்ந்து நான்காவது இடத்தில் பேட்டிங் செய்வதற்கான வாய்ப்புகளை கொடுத்தார். உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பான முறையில் செயல்பட்டு வந்த ரியான் பராக் இதை பயன்படுத்தி 500க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்து வெளியே அணியிலும் இடம் பிடித்தார்.
இந்த நிலையில் இந்த முறை தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட ரியால் பரட்டை மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் மாற்றுவாயாக அனுப்பிக் கொண்டு இருக்கிறார். இதனால் அவரிடம் கடந்த ஆண்டு போல சீரான ரன் குவிப்பை பார்க்க முடியவில்லை. இது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும் பாதிப்பு வருகிறது.
எங்கள் ஊரில் முடியாது
இந்த நிலையில் தங்களது சொந்த மைதானம் பற்றி பேசி இருப்போம் ரியான் பராக் ” நாங்கள் தற்பொழுது 240 ரன்கள் எடுக்கும் போட்டிகளை பார்த்து வருகிறோம். அந்த மைதானங்களில் நல்ல பவுன்ஸ் இருக்கிறது பந்து நல்ல வேகத்தில் வருகிறது. ஆனால் எங்களுடைய ஜெய்ப்பூர் மைதானத்தில் பவுன்ஸ் மிகவும் குறைவாக இருக்கிறது. மேலும் கொஞ்சம் வேகமும் குறைவாக இருக்கிறது. எனவே இங்கு 180 ரன்கள் அளவு மட்டுமே எடுக்க முடியும். நாங்கள் இதை உணர்ந்து இதற்கு சிறப்பான முறையில் தயாராகிக் கொண்டு வருகிறோம்”
இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. திடீரென்று பச்சை நிற ஜெர்சிக்கு மாறிய ஆர்சிபி.. காரணம் என்ன?
“எனக்கு இந்த முறை நல்ல தொடக்கங்கள் கிடைத்தன. நான் அதனை பெரிய ஸ்கோராக மாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இந்த முறை நான் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் பேட்டிங் செய்ய அனுப்பப்பட்டேன். ஆனால் இனிவரும் போட்டிகளில் நான் தொடர்ந்து நான்காவது இடங்களில் பேட்டிங் செய்வேன் என நம்புகிறேன். சிறந்த இன்னொரு ஐபிஎல் சீசன் வரும் என்று நினைக்கிறேன். மீண்டும் இந்திய அணிக்குள் வருவேன்” என்று கூறியிருக்கிறார்.






