ஐசிசி ரேங்கிங்.. 10 ஆண்டுக்கு பின் கோலிக்கு சோகம்.. ஜெய்ஸ்வால் பண்ட் ஆறுதல் – புதிய பட்டியல்

0
144
Jaiswal

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் விராட் கோலிக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய சரிவு ஏற்பட்டிருக்கிறது.

நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய மண்ணில் இந்திய அணி 12 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறது. இதன் காரணமாக இந்திய முன்னணி பேட்ஸ்மேன்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் டெஸ்ட் தரவரிசையில் பெரிய சரிவை சந்தித்திருக்கிறார்கள்.

- Advertisement -

பத்து ஆண்டுகளுக்குப் பின் நடந்த சோகம்

தற்போது ஐசிசி வெளியிட்டு இருக்கும் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் விராட் கோலி 655 புள்ளிகள் உடன் 22 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். 2014 ஆண்டுக்குப் பிறகு அவர் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 20 இடங்களுக்கு வெளியில் சென்றது கிடையாது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவர் 20 இடத்தை விட்டு வெளியே சென்று இருக்கிறார்.

மேலும் இந்திய அணியின் கேப்டன் மற்றும் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 629 புள்ளிகள் எடுத்து 26வது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். நியூசிலாந்து தொடங்குவதற்கு முன்பாக இந்திய பேட்ஸ்மேன்கள் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் மிகவும் நல்ல நிலையில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய வகையில் இருந்தார்கள். அப்பொழுது ஒட்டுமொத்தமாக ஒரே தொடரில் நிலைமை மாறி இருக்கிறது.

- Advertisement -

ஆறுதல் தந்த ரிஷப் பண்ட் மற்றும் ஜெய்ஸ்வால்

நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் குறிப்பிடத்தக்க வகையில் விளையாடிய ஜெய்ஷ்வால் 777 புள்ளிகள் உடன் நான்காவது இடத்திலும், கடைசி டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அதிரடி அரைசதங்கள் அடித்த ரிஷப் பண்ட் 750 புள்ளிகள் உடன் ஆறாவது இடத்திலும் நீடிக்கிறார்கள். இவர்கள் இருவர் மட்டுமே முதல் 10 இடங்களில் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு அடுத்து இந்திய அணியின் இளம் நட்சத்திர ஆட்டக்காரர் சுப்மன் கில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 90 ரன்கள் எடுத்ததின் காரணமாக 680 புள்ளிகள் உடன் 16 வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

இதையும் படிங்க : பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் 2027 வரை விளையாட தடை.. பிசிசிஐ செய்த சம்பவம்.. காரணம் என்ன?

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் 10 இடங்கள் :

903 – ஜோ ரூட்
804 – கேன் வில்லியம்சன்
778 – ஹாரி புரூக்
777 – யஷஸ்வி ஜெய்ஸ்வால்
757 – ஸ்டீவ் ஸ்மித்
750 – ரிஷப் பந்த்
743 – டேரில் மிட்செல்
728 – உஸ்மான் கவாஜா
724 – சவுத் ஷகீல்
720 – மார்னஸ் லபுசேன்

- Advertisement -