பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் 2027 வரை விளையாட தடை.. பிசிசிஐ செய்த சம்பவம்.. காரணம் என்ன?

0
362
Stokes

தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரில் 2027 ஆம் ஆண்டு வரையில் விளையாட முடியாத சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

2025 ஆம் ஆண்டு ஐ பி எல் தொடர் மெகா ஏலத்துடன் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏலம் சவுதி அரேபியா ஜெட்டாவில் நகரத்தில் நவம்பர் 24 மற்றும் நவம்பர் 25ஆம் தேதியில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் மொத்தம் 1547 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருக்கிறார்கள்.

- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் எடுத்த முடிவு

இங்கிலாந்து கிரிக்கெட்டில் இருந்து நடப்பு ஐபிஎல் மெகா ஏலத்திற்கு காயத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் வேகப் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் தன்னுடைய பெயரை பதிவு செய்திருக்கிறார். மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கழட்டி விடப்பட்ட இங்கிலாந்து ஐபிஎல் பிரபலம் ஜோஸ் பட்லர் மெகா ஏலத்திற்கு வருகிறார்.

மேலும் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக இதுவரை ஐபிஎல் தொடரில் விளையாடாத, தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுதாக ஓய்வு பெற்றிருக்கும் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன், இந்த முறை ஐபிஎல் மெகா ஏலத்தில் தன்னுடைய பெயரை பதிவு செய்திருக்கிறார். ஆனால் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் மெகா ஏலத்தில் தன்னுடைய பெயரை பதிவு செய்யவில்லை.

- Advertisement -

ஐபிஎல் தொடரின் புதிய விதி

இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் முதல், வெளிநாட்டு வீரர்கள் மெகா ஏலத்தில் பெயரை பதிவு செய்யவில்லை என்றால், அவர்கள் மீண்டும் மெகா ஏலம் வரும்வரையில் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் புதிய விதியை கொண்டு வந்திருக்கிறது. ஏனென்றால் மினி ஏலத்தில் மட்டுமே கலந்து கொண்டு பெரிய தொகைக்கு ஏலம் போவதை சர்வதேச வீரர்கள் வாடிக்கையாக சிலர் வைத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: இந்திய ஏ அணி பந்தை சேதப்படுத்தினாங்க.. எங்க ஆளுங்க இதுக்காக மறைக்கிறாங்க – டேவிட் வார்னர் விமர்சனம்

இதன் காரணமாக தற்பொழுது மெகா நேரத்தில் பென் ஸ்டோக்ஸ் தன்னுடைய பெயரை பதிவு செய்யாத காரணத்தினால், அடுத்து 2027 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில்தான் மீண்டும் அவர் கலந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் 2027 ஆம் ஆண்டு வரையில் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்க முடியாத சூழ்நிலையை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதி உருவாக்கி இருக்கிறது!

- Advertisement -