இந்திய அணி வீரர்கள் தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடி முடித்த நிலையில் அடுத்ததாக ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு தயாராகி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் ஆர்சிபி அணி வீரரான விராட் கோலி இனி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரான பார்டர் கவாஸ்கர் டிராபியில் விளையாடியது. அதில் முதல் போட்டியில் பும்ரா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து டெஸ்ட் தொடரை எளிதாக வெல்லும் என்று அனைவராலும் கருதப்பட்டது.
ஆனால் இரண்டாவது போட்டியில் ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, இந்திய அணி தோல்வி பாதைக்கு சென்றது. ஒரு டிரா மற்றும் இரண்டு தோல்வி என இந்திய அணி மோசமான நிலையில் இருந்ததை அடுத்து ரோகித் சர்மா ஐந்தாவது போட்டியில் கேப்டன் பதவியை விட்டு விலகினார். மேலும் கடைசி போட்டிக்கு கேப்டனாக செயல்பட்ட பும்ரா காயம் காரணமாக வெளியேற அந்தப் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது.
இதில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே சதம் அடித்து அதற்கு பின்னர் மோசமாக விளையாடி பல விமர்சனங்களை எதிர்கொண்டார். இந்த சூழ்நிலையில் தற்போது விராட் கோலிக்கு 36 வயதாவதால், அடுத்ததாக 2027ம் ஆண்டு தான் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடும். இந்த சூழ்நிலையில் அது குறித்து பேசி விராட் கோலி கடந்த டெஸ்ட் தொடரில் விளையாடியது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தனது கடைசி தொடராகும் எனவும் இதுவரை விளையாடியதில் மகிழ்ச்சி என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:நான் அஸ்வின் இல்லை.. என்னால் அதை செய்யவே முடியாது.. காரணம் இதுதான் – வருண் சக்கரவர்த்தி விளக்கம்
இதுகுறித்து அவர் கூறும் போது “என்னிடம் இன்னொரு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் கடந்த காலத்தில் நடந்த அனைத்திற்கும் நான் நிம்மதியாக இருக்கிறேன்” என்று விராட் கோலி பேசி இருக்கிறார். அதாவது இதுவரை விளையாடியதில் தான் திருப்தி அடைகிறேன் என்று விராட் கோலி பேசி இருக்கிறார். தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடும் விராட் கோலி விரைவாகவே இந்திய அணியில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது