“விராட் கோலிகிட்ட வீக்னஸ் இருக்கு; கில்லுக்கு வீக்னஸ் இல்ல சச்சின் மாதிரியே!” – சர்ச்சையை கிளப்பிய முகமது கைஃப்

0
343
Kaif

இந்திய கிரிக்கட்டுக்கு பேட்டிங் யூனிட்டில் பலகாலமாகத் தலைமையேற்று நடத்தி வந்தவர் சச்சின் டெண்டுல்கர். இவரது பேட்டிங் வெற்றி தோல்விகளே அணியின் வெற்றி தோல்வியை நிர்ணயித்தன.

இவருக்கு அடுத்து இவரது இடத்தில் பேட்டிங் யூனிட்டுக்கு தலைமை ஏற்று அணியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க கூடிய இடத்திற்கு விராட் கோலி வந்தார்.

- Advertisement -

தற்பொழுது விராட் கோலியின் இடத்திற்கு இளம் வீரர் சுப்மன் கில்லை வைத்தும், விராட் கோலி உடன் அவரை ஒப்பிட்டு அடுத்த விராட் கோலி என்றும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

இந்த வருடத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வடிவங்களிலும் சதங்களைக் கண்டு, ஐபிஎல் தொடரிலும் மூன்று சதங்களுடன் 860 ரன்களை குவித்து, மிகச் சிறப்பான பேட்டிங் ஃபார்மில் கில் இருந்து வருகிறார்.

தற்பொழுது இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மோத அங்கு முகாமிட்டுள்ளது இந்திய அணி. இங்கிலாந்தில் விளையாடுவது குறித்தும், விராட் கோலி, கில் மற்றும் சச்சின் ஆகியோரை வைத்தும் சர்ச்சையான ஒரு கருத்தை முஹம்மது கைப் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“சச்சின் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு பேட்ஸ்மேன். சச்சின் மற்றும் விராட் கோலியை ஒப்பிட்டுப் பார்த்தால் விராட் கோலிக்கு இன்னும் சில பலவீனங்கள் இருக்கிறது. அவர் 2014 ஆம் வருடம் இங்கிலாந்துக்குச் சென்ற பொழுது அவர் பார்மில் இல்லை.

ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆப் ஸ்டெம்புக்கு வெளியே அவரை மிகவும் தொந்தரவு செய்தார். அதற்கு விராட் கோலியால் பதில் சொல்ல முடியவில்லை. அந்தத் தொடரில் அவர் மொத்தமாகத் தோல்வி அடைந்தார்.

சுப்மன் கில்லின் பேட்டிங் தொழில்நுட்பம் சச்சினைப் போலவே இருப்பதாக நான் உணர்கிறேன். அவரை ஆட்டம் இழக்க வைப்பது கடினமானது. அவரது ஆட்டத்தில் எந்தப் பலவீனமும் இல்லை.

சச்சின் மற்றும் விராட் கோலி இருவருடனும் நான் விளையாடி இருக்கிறேன். ஆனால் விராட் கோலிக்கு பேட்டிங்கில் பலவீனங்கள் உள்ளது.

தொழில்நுட்பம் மற்றும் மனவலிமை என்று வரும் பொழுது சுப்மன் கில் சச்சினைப் போலவே மிகவும் சிறப்பாக இருக்கிறார்!” என்று மிகவும் பரபரப்பான கருத்தைக் கூறியிருக்கிறார்!