973 ரன் அடிச்ச கோலி.. அடுத்த வெஸ்ட் இண்டீஸ்ல செஞ்ச சம்பவத்துல மிரண்டுட்டேன்.. அதான் கிங் – விக்ரம் ரத்தோர் பேட்டி

0
87
Virat

விராட் கோலி 2016 ஆம் ஆண்டு எப்படி ஐபிஎல் தொடரில் இருந்து டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உடனே மாறினார் என முன்னாள் இந்திய பேட்டிங் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறியிருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் டி20 கிரிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பான செயல்பாட்டை சீராகக் கொண்டிருக்கும் ஒரே பேட்ஸ்மேனாக விராட் கோலி மட்டுமே இருந்து வருகிறார். அவருடன் சமகாலத்தில் உடன் வைத்து பேசப்படும் எந்த பேட்ஸ்மேன்களும் மூன்று வடிவத்திலும் சிறப்பான புள்ளி விபரங்கள் கொண்டவர்கள் கிடையாது.

- Advertisement -

2016 ஆம் ஆண்டு ஐபிஎல் விஸ்வரூபம்

விராட் கோலி ஐபிஎல் தொடரில் 2016ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக தனது பேட்டிங் திறனின் உச்சத்தில் இருந்தார். அந்த வருட ஐபிஎல் சீசனில் 16 போட்டிகளில் 152 ஸ்ட்ரைக் ரேட்டில், 973 ரன்கள் குவித்தார். இதில் நான்கு சதங்கள் மற்றும் ஏழு அரைத்ததங்கள் அடக்கம். மேலும் 83 பவுண்டரிகள் மற்றும் 38 சிக்ஸர்கள் விளாசி தள்ளினார்.

ஐபிஎல் தொடரில் முதல் வீரராக ஆயிரம் ரன்கள் குவிப்பார் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 35 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மேலும் முதல் முறையாக கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பில் இருந்து ராயல் சேலஞ்சர்ஸ் அணி தோல்வி அடைந்து கோட்டை விட்டது.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸில் காட்டிய மேஜிக்

இதற்கு அடுத்து அதே 2016 ஆம் ஆண்டு இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு வெஸ்ட் இண்டீஸ் சென்றது. அந்த சிறப்பாக விளையாடிய விராட் கோலி 283 பந்துகளில் தன்னுடைய முதல் சர்வதேச இரட்டை சதத்தை பதிவு செய்தார். மேலும் அங்கிருந்து தொடர்ந்து நான் டெஸ்ட் தொடர்களில் இரட்டை சதம் அடித்த ஒரே பேட்ஸ்மேனாக சாதனை படைத்தார்.

இதையும் படிங்க : இந்திய வீரர்கள் இதை செய்ய முன்வரதில்ல.. 15 வருஷமா ஐபிஎல்-ல என்ன நடந்தது? – அஸ்வின் கேள்வி

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறும் பொழுது ” 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விராட் கோலி 973 ரன்கள் எடுத்தார். 38 சிக்ஸர்கள் அடித்தார் மேலும் 152 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி இருந்தார். அதன் பிறகு உடனடியாக வெஸ்ட் இண்டிஸ் சென்று டெஸ்ட் தொடரில் ஒருமுறை கூட பந்தை காற்றில் அடிக்காமல் இரட்டை சதத்தை எடுத்தார். வடிவத்திற்கு தகுந்தது போல் மாறி கொள்ளக்கூடிய தகவமைப்பு விராட் கோலி இடம் பெரிய அளவில் உண்டு. இதுதான் விராட் கோலியின் தரம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -