இந்திய வீரர்கள் இதை செய்ய முன்வரதில்ல.. 15 வருஷமா ஐபிஎல்-ல என்ன நடந்தது? – அஸ்வின் கேள்வி

0
43
Ashwin

ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதியின் காரணமாக இந்திய கிரிக்கெட்டில் புதிய ஆல் ரவுண்டர்கள் உருவாவது தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. தற்பொழுது இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தனது பார்வையை முன் வைத்திருக்கிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதி கொண்டுவரப்பட்டது. இதனால் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் அல்லது பந்துவீச்சாளரை விளையாட வைத்துக் கொள்ள முடிகிறது. இதன் காரணமாக ஆல்ரவுண்டருக்கு இருந்த முக்கியத்துவம் ஐபிஎல் தொடரில் குறைந்தது. இந்திய அணியின் வாஷிங்டன் சுந்தர் போன்ற ஆல் ரவுண்டர்கள் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

ஆல் ரவுண்டர்கள் பஞ்சம்

இதன் காரணமாக இந்தியாவில் மேற்கொண்டு உருவாகும் இளம் வீரர்கள் ஐபிஎல் தொடரை முன் வைத்துதான் உருவாகி வருவார்கள். ஐபிஎல் தொடரில் ஆல் ரவுண்டருக்கு மதிப்பில்லை எனும் பொழுது வளரும் வீரர்கள் ஆல்ரவுண்டர்களாக தங்களை முன்னேற்றிக் கொள்ள கஷ்டப்பட மாட்டார்கள்.

இதன் காரணமாக இந்திய கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டர்கள் உருவாகி வருவது குறைந்து விடும். இது இந்திய கிரிக்கெட்டை பாதிக்கக்கூடிய வகையில் அமையும் என முன்னாள் வீரர்கள் பலர் இம்பேக்ட் பிளேயர் விதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் கிரிக்கெட் என்றால் 11 பேருடன் விளையாட வேண்டும் என்று ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஏற்கனவே கூறியிருந்தார்கள்.

- Advertisement -

15 வருடமாக என்ன செய்தார்கள்?

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது ” ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் போன்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று எனக்கு தெரியும். இம்பேக்ட் பிளேயர் விதி இல்லை என்றால் கூட, அவர்கள் வழக்கமாக ஆறு மணி நேரம் பேட்டிங் பயிற்சியும் ஒரு மணி நேரம் பந்துவீச்சு பயிற்சியும் செய்வார்கள். இதேதான் இம்பேக்ட் பிளேயர் விதி இருந்தாலும் அவர்கள் செய்கிறார்கள்.

இதையும் படிங்க : 2023 WTC பைனலில் செஞ்சத.. விராட் கோலிக்கு திரும்பவும் செய்வேன் – ஆஸி ஸ்காட் போலன்ட் சவால்

எனவே இங்கு விதி ஒரு பிரச்சனை கிடையாது. நீங்கள் அதில் ஆர்வம் காட்டுகிறீர்களா என்பது மட்டுமே பிரச்சனை. 15 வருடங்களாக ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதி இல்லை. இந்த காலகட்டத்தில் ஐபிஎல் தொடரில் இந்தியாவில் இருந்து எத்தனை ஆல்ரவுண்டர்கள் வந்துவிட்டார்கள்? பெரிய அளவில் யாருமே வரக் கிடையாது. ஏனென்றால் பந்து வீச்சிலும் பங்களிப்பு கொடுக்க வேண்டும் என்று இந்திய வீரர்கள் பலர் விரும்புவதில்லை. அவர்கள் தங்களுடைய முக்கியமான பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -