கடந்த 17 வருடமாக இந்திய அணியில் ஒன்றாக சேர்ந்து ரோகித் சர்மா உடன் விளையாடி வருவது குறித்து இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி மனம் திறந்து பேசி இருக்கிறார்.
இந்திய அணிக்காக 2007 ஆம் ஆண்டு ரோகித் சர்மா அறிமுகமானார். இதைத்தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு விராட் கோலி அறிமுகமானார். இருவரும் சேர்ந்து 17 ஆண்டுகளாக ஒன்றாக கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள். மேலும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மறக்க முடியாத பல வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்கள்.
இயல்பாகவே பிணைப்பு இருக்கிறது
இந்திய அணியில் ரோகித் சர்மா வாய்ப்பு பெற்ற முதல் ஆண்டிலேயே உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றார். தோனி தலைமையில் 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்றார்கள். இதைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு விராட் கோலி உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றார். ஆனால் இவர்கள் இருவரும் சேர்ந்து 2024 ஆண்டுதான் உலகக் கோப்பையை வென்ற ஒரே அணியில் இடம் பெற்றார்கள்.
இதுகுறித்து விராட் கோலி பேசும் பொழுது “நீங்கள் ஒருவருடன் நீண்ட காலம் இணைந்து விளையாடும் பொழுது பிணைப்பு என்பது இயல்பானது என்று நான் நினைக்கிறேன். ஆரம்பத்தில் விளையாட்டு பற்றிய நுண்ணறிவு என்பது ஒருவரிடம் இருந்து ஒருவர் கற்றுக் கொள்வதில் ஆரம்பிக்கிறது. மேலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உங்களிடம் இருக்கும் எல்லா கேள்விகளையும் பகிர்ந்து கொள்கிறீர்கள்”
கேப்டன் பொறுப்பில் இருவருமே பங்களிப்பு செய்தோம்
“பொதுவாக ஒன்னும் பின்னுமாக நிறைய நடக்கின்றன. தலைமைத்துவத்தைப் பொறுத்தவரையில் நாங்கள் அடிப்படையில் மிக நெருக்கமாகப் பணியாற்றி இருக்கிறோம். மேலும் நாங்கள் அதிகமாக விவாதித்திருக்கிறோம். இறுதியாக நாங்கள் ஒரே பக்கத்தில் முடிவெடுக்க கூடியவர்களாக இருந்திருக்கிறோம். நம்பிக்கை மற்றும் காரணியின் அடிப்படையில் அணியின் வெற்றிக்காக நாங்கள் வேலை செய்தோம்”
இதையும் படிங்க : தோனிக்கு எதிரா சிஎஸ்கே ரசிகர்களே ரோட்டுக்கு வந்துட்டாங்க.. மரியாதை எப்ப போச்சு? – மனோஜ் திவாரி பேட்டி
“நாங்கள் சேர்ந்து ஒன்றாக விளையாடிய காலங்களை நிச்சயம் அனுபவித்தோம். நாங்கள் இந்திய அணிக்காக நீண்ட காலமாக விளையாடும் வாய்ப்பை இதனால் உருவாக்கினோம். நாங்கள் உள்ளே வரும் பொழுது நிச்சயமாக 15 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடுவோம் என்று நினைக்கவில்லை. எங்களுக்கு கிடைத்த நினைவுகள் மற்றும் பகிர்ந்து கொண்ட விஷயங்களுக்கு நன்றி உடல் மகிழ்ச்சியுடனும் இருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.






