தோனிக்கு எதிரா சிஎஸ்கே ரசிகர்களே ரோட்டுக்கு வந்துட்டாங்க.. மரியாதை எப்ப போச்சு? – மனோஜ் திவாரி பேட்டி

0
167
Manoj

கடந்த இரண்டு ஆண்டுகளாக மகேந்திர சிங் தோனியின் புகழ் குறைய ஆரம்பித்து இருப்பதாகவும், சிஎஸ்கே ரசிகர்களே ரோட்டுக்கு வந்து எதிராக பேச ஆரம்பித்திருப்பது நல்ல அறிகுறி இல்லை என்றும் மனோஜ் திவாரி எச்சரிக்கை செய்திருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி விளையாடி உள்ள நான்கு போட்டிகளில் முதல் போட்டியை வென்று, அதற்கு அடுத்தது தொடர்ந்து மூன்று போட்டிகளை தோற்று இருக்கிறது. இந்த மூன்று தோல்விகளில் சொந்த மைதானத்தில் இரண்டு தோல்விகள் வந்திருக்கிறது என்பது கவலை அளிக்கக்கூடிய விஷயமாக அந்த அணிக்கு இருக்கிறது.

- Advertisement -

பஞ்சாப் சிறந்த முன் உதாரணம்

நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இரண்டாவது போட்டியில் பஞ்சாப் அணி ராஜஸ்தான் அணிக்கு எதிராக சொந்த மைதானத்தில் விளையாடியது. இந்த போட்டியில் ஆரம்பத்திலேயே முதல் நான்கு விக்கெட்டுகளை இழந்துவிட்ட போதிலும், 13 ஓவருக்கு வெற்றி பெறும் நோக்கில் ரண்களை சேர்த்து அடித்தளத்தை உருவாக்கியது. பிறகு ஏழு ஓவர்களுக்கு நூறு ரன்கள் எடுப்பதற்கான முயற்சிகள் ஈடுபட்டு விக்கெட்டுகளை இழந்து தோற்றது.

பஞ்சாப் அணி இந்த போட்டியில் தோல்வி அடைந்து இருந்தாலும் அவர்கள் வெற்றி பெறுவதற்காக போராடினார்கள். வெற்றிக்கு போராடுவதற்கு முதலில் அவர்கள் ஒரு அடித்தளத்தை உருவாக்கினார்கள். ஆனால் சிஎஸ்கே விக்கெட்டுகளை இழந்ததும் உடனடியாக அங்கிருந்து ரன் ரேட்டுக்காக விளையாடுவது போல மிக மெதுவாக விளையாடினார்கள். அவர்களிடம் வெற்றி பெறுவதற்கான எந்த முயற்சியையும் பார்க்க முடியவில்லை. இதுதான் சிஎஸ்கே ரசிகர்களை கோபம் அடைய வைத்திருக்கிறது.

- Advertisement -

சிஎஸ்கே ரசிகர்கள் ரோட்டில் இறங்கிட்டாங்க

இதுகுறித்து மனோஜ் திவாரி பேசும் பொழுது “2023 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற பொழுது தோனி ஓய்வு பெறுவதற்கு சரியான நேரமாக இருந்தது. அவர் அப்போது ஓய்வு பெற்று இருந்தால் விஷயங்கள் மிகச் சிறப்பாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். கிரிக்கெட்டில் அவர் சம்பாதித்த புகழ் மற்றும் மரியாதை அனைத்தும் இந்த இரண்டு ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக நழுவுவதாக நான் உணர்கிறேன்”

இதையும் படிங்க : நான் அந்த சிஎஸ்கே வீரரை விடமாட்டேன்.. என்கிட்ட சொல்லிட்டு கேஎல் ராகுல் செஞ்சார் – கோச் பதானி பேச்சு

“அவர் தன்னுடைய ஃபயர் பவரை இழந்துவிட்டார். இதை ரசிகர்களால் பார்க்க சகிக்கவில்லை. குறிப்பாக கடந்த போட்டியின் தோல்விக்கு பிறகு சென்னை ரசிகர்கள் தோனிக்கு எதிராகவே சாலையில் இறங்கி பேட்டி கொடுத்தது, இனி இது வேலைக்காகாது என்பதை மிகத் தெளிவாக உணர்த்துகிறது. எனவே அவர் இது குறித்து யோசிக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -