26க்கு 3 விக்கெட்.. க்ருனால் பேட்டிங் செய்ய வந்ததும்.. என் பிளானை உடனே மாற்றினேன்.. அதான் ஜெயிக்க காரணம் – விராட் கோலி

0
606

நேற்று நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையான ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 46வது போட்டி நேற்று டெல்லியில் நடைபெற்றது.

இதில் சிறப்பாக விளையாடிய பெங்களூர் அணி வெற்றி பெற்ற விதம் குறித்து அந்த அணியின் விராட் கோலி சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

பெங்களூர் அணி சிறப்பான வெற்றி

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதன்படி பேட்டிங் களம் இறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் 39 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். இறுதிக்கட்டத்தில் ஸ்டெப்ஸ் 18 பந்துகளில் 34 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி பெங்களூர் அணி களம் இறங்கிய நிலையில் நான்கு ஓவர்களில் 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தாலும் அதற்குப் பிறகு குருனால் பாண்டியா மற்றும் விராட் கோலி ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டு வெற்றி பெற வைத்தது. இதில் சிறப்பாக விளையாடிய பாண்டியா 47 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் நான்கு சிக்சர் என 73 ரன்கள் குவித்தார். மறுமுனையில் விராட் கோலி 47 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

என்னுடைய பங்கு இதுதான்

இந்த சூழ்நிலையில் வெற்றி பெற்ற விதம் குறித்து விராட் கோலி பேசும்போது “இந்த ஆடுகளத்தை பார்க்கும்போது எங்களுக்கு கிடைத்த வெற்றி சிறப்பானதாகும். மற்ற ஆடுகளங்களில் விளையாடியதை விட இந்த ஆடுகளம் சற்று வித்தியாசமாக இருக்கிறது. சேசிங் செய்யும் போதெல்லாம் நாங்கள் சரியான பாதையில் செல்கிறோமா அப்போது என் பங்கு என்ன என்பதை நான் டக் அவுட்டில் இருந்து தொடர்ந்து சரி பார்த்துக் கொண்டிருக்கிறேன். க்ருணால் இன்று அவருடைய நாளாக இருந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் பேட்டிங் செய்ய வருவதற்காக நாங்கள் காத்திருந்தோம்.

இதையும் படிங்க:பாண்டியாவுக்கு நடந்த மாதிரி.. லக்னோ அணி தயவு செஞ்சு இந்த சிக்கல்ல ரிஷப் பண்ட்டை தள்ளாதீங்க – இயான் மோர்கன் கோரிக்கை

எந்த பவுலரை குறி வைக்க வேண்டும் என்று டார்கெட் செய்து என் சிங்கிள் மற்றும் இரட்டை இலக்க ரன்களை மட்டும் தொடர்ந்து நிறுத்தாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த வருடம் நீங்கள் சொந்த மண்ணை விட்டு வெளியே வந்து உடனடியாக அடிக்க முடியாது. ஆடுகளத்தை புரிந்து மதிப்பீடு செய்து அதற்கேற்ற வகையில் விளையாட வேண்டும். இந்த முறை எங்கள் பேட்டிங் சரியான முறையில் அமைந்திருக்கிறது அதனால் தான் 10 போட்டிகளில் 7ல் எங்களால் வெற்றி பெற முடிந்தது. கூடுதல் பேட்டிங் பலத்திற்காக டேவிட் மற்றும் ரொமாரியோ ஆகியோர் இருக்கிறார்கள். புவி மற்றும் ஹாசில் வுட் ஆகியோர் பந்துவீச்சில் சிறப்பாக விளங்குகிறார்கள். சுயாஸ் ஒரு கருப்பு குதிரையாக இருக்கிறார். ஒட்டுமொத்தமாக இப்போது எங்கள் அணி நன்றாக உள்ளது” என்று விராட் கோலி பேசி இருக்கிறார்.

- Advertisement -