இந்திய அணி தோல்விதான்.. ஆனாலும் ரொம்ப கஷ்டமான இந்த பிட்ச்ல அடிச்ச சதம்தான் எனக்கு பெஸ்ட் – கோலி பேட்டி

0
399

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணி விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவையே அதிகம் நம்பி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி ஆஸ்திரேலியாவில் தான் அடித்த சதங்களிலேயே மிகவும் ஸ்பெஷலான சதம் குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

இந்தியா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாட உள்ள நிலையில் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 22ஆம் தேதி பெர்த் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் முதல் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடாத நிலையில் இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டுக்கு தலைமை காணும் வகையில் விராட் கோலி திகழ்கிறார். இருப்பினும் விராட் கோலியின் சமீபத்திய பேட்டிங் ஃபார்ம் கவலை அளிக்கும் வகையில் இருக்கிறது.

இருப்பினும் ஆஸ்திரேலியா மண்ணில் எப்போதுமே தன் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தி இருக்கும் விராட் கோலி இந்த முறையும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று முன்னாள் வீரர்கள் பலரும் தங்கள் ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். இதுவரை ஆஸ்திரேலியாவில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி அதில் 6 சதங்களை அடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 2014 – 15ஆம் ஆண்டுகளில் நான்கு சதங்களை அடித்திருக்கிறார். அந்த ஆண்டில் அடித்த 29 டெஸ்ட் சதங்களில் ஆறு சதங்கள் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அடித்திருக்கிறார்.

- Advertisement -

பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளம்

2014ஆம் ஆண்டு அடிலெய்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தான் அடித்த இரட்டை சதம் தனக்கு மிகவும் பிடித்தது என்று அடிக்கடி அது குறித்து நான் நினைவு கூறும் விராட் கோலி, இந்த முறை 2018ஆம் ஆண்டு பெர்த்தில் 257 பந்துகளை எதிர்கொண்டு அடித்த 123 ரன்கள் தனக்கு மிகவும் பிடித்த டெஸ்ட் சதம் என்று சமீபத்தில் பிசிசிஐ பகிரப்பட்ட ஒரு வீடியோவில் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். விராட் கோலி 123 ரன்கள் குவித்திருந்தாலும் அந்தப் போட்டியில் இந்திய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

இதையும் படிங்க:ரன்மழை தந்த பவுலர்கள்.. ஆர்சிபி எடுத்த தைரியமான முடிவு.. ஐபிஎல் 2025 கோப்பைக்கு அசத்தல் பிளான்

இதுகுறித்து விராட் கோலி கூறும் பொழுது “எனது சிறந்த ஆட்டம் குறித்து கூறினால் ஆஸ்திரேலியாவில் 2018-19ஆம் ஆண்டில் நான் சுற்று பயணம் செய்தபோது நான் அடித்த சதம் எனக்கு பிடித்தது என்று கூறுவேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் விளையாடிய கடினமான ஆடுகளம் இதுவாகத்தான் இருந்திருக்கும். அதில் நான் முயற்சி செய்து சதம் அடித்தது பெரிய விஷயம்” என்று நான் விராட் கோலி கூறி இருக்கிறார்.

- Advertisement -