இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தனக்கு ஆரம்ப காலத்தில் இந்திய அணியில் மூன்றாவது இடத்தை கொடுத்து ஆதரித்தது யார் என்பது குறித்து பேசி இருக்கிறார்.
ஆர்சிபி அணியின் ப்ளே போல்ட் வீடியோ தொகுப்பில் விராட் கோலி கலந்து கொண்டு பல்வேறு கேள்விகளுக்கு மிகவும் வெளிப்படையான முறையில் பதில் அளித்திருக்கிறார். 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை தோற்றது, கேப்டன் பதவியை விட்டு விலகியது என பல விஷயங்களுக்கு புதிய பதில்களை அளித்திருக்கிறார்.
விராட் கோலியின் ஆரம்ப வாழ்க்கை
2008 ஆம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பையை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வென்று அசத்தியது. அதே ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி அவரை வாங்கியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெல்லி அணிக்கு அவர் தேர்வு செய்யப்படவில்லை.
மேலும் விராட் கோலியை விட அனுபவ வீரரான ரோஹித் சர்மாவை 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தேர்வு செய்யவில்லை. அதே சமயத்தில் விராட் கோலியை கேப்டன் தோனி மற்றும் பயிற்சியாளர் கிரிஸ்டன் இருவருமே நம்பினார்கள். அணி நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு மூத்த வீரர்களும் ஆதரவு தந்தார்கள்.
இவர்கள் இருவரும் ஆதரித்தார்கள்
இது குறித்து பேசி இருக்கும் விராட் கோலி கூறும் பொழுது “எனது திறமை குறித்து நான் மிகவும் எதார்த்தமான முறையில்தான் உணர்ந்திருந்தேன். ஏனென்றால் என்னை சுற்றி விளையாடும் பலரையும் நான் பார்த்திருந்தேன். அவர்களின் திறமைக்கு அருகில் என்னுடைய திறமை இல்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் என்னிடம் இருந்த ஒரு விஷயம் உறுதியானது. அது என்னவென்றால் அணிக்கு தேவை என்றால் நான் எதையும் செய்ய தயாராக இருப்பதுதான்”
இதையும் படிங்க : எதிர்கால சிஎஸ்கேவுக்காக.. தோனி இப்பவே உருவாக்கிய மாஸ்டர் பிளான்.. ஓய்வு பெறுகிறாரா?.. முழு விவரங்கள்
” இந்திய அணியில் நான் ஆரம்பத்தில் விளையாடுவதற்கு இதுவே முக்கிய காரணமாக இருந்தது. என்னிடம் இருக்கும் இந்த குணத்தின் காரணமாகவே எனக்கு மூன்றாம் இடத்தை கேப்டன் தோனி மற்றும் பயிற்சியாளர் கிரிஸ்டன் கொடுத்தார்கள். அவர்கள் என்னை இந்த இடத்திற்கு நம்புவதாகவும் சொன்னார்கள். நான் விளையாட்டை எந்த நிலையிலும் மாற்றக்கூடிய வெற்றியாளனாக பார்க்கப்படவில்லை. ஆனால் சண்டையில் இருப்பேன் அதை கடைசி வரை கைவிடமாட்டேன் என்கின்ற இந்த குணத்தைதான் அவர்கள் ஆதரித்தார்கள்” என்று கூறி இருக்கிறார்.






