ஐபிஎல் 2024

தினேஷ் கார்த்திக் ஒரு பெரிய குழப்பமான ஆள்.. விராட் கோலி வீடியோவில் வெளியிட்ட சுவாரசியமான தகவல்

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்று எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் ஆர்சிபி அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டியுடன் ஐபிஎல் தொடரில் இருந்து தினேஷ் கார்த்திக் ஓய்வு பெற்றுக் கொண்டார். அவருடனான முதல் சந்திப்பு எப்படி இருந்தது என விராட் கோலி ஆர்சிபி வீடியோவில் சுவாரசியமாக தகவல் ஒன்றைக் கூறியிருக்கிறார்.

- Advertisement -

தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரில் 2008 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை எந்த சீசனையும் தவறவிடாமல் 17 ஆண்டுகள் விளையாடியிருக்கிறார். டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஆரம்பித்த அவரது ஐபிஎல் வாழ்க்கை இறுதியாக ஆர்சிபி அணியில் முடிவுக்கு வந்திருக்கிறது. மொத்தம் அவர் ஆறு அணிகளில் விளையாடியிருக்கிறார்.

இந்த ஆண்டுடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த அவருக்கு சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டி மிகவும்முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அந்த போட்டியில் வென்றதால் கூடுதலாக ஒரு போட்டியை விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

இந்த நிலையில் துரதிஷ்டவசமாக ராஜஸ்தான் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி தோல்வி அடைய, அவருடைய ஐபிஎல் பயணம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் தினேஷ் கார்த்திக்கை வாழ்த்தும் விதமாக ஆர்சிபி வெளியிட்டுள்ள வீடியோவில் விராட் கோலி சுவாரசியமான சம்பவம் ஒன்றைக் கூறியிருக்கிறார்.

- Advertisement -

தினேஷ் கார்த்திக் உடன் தனது முதல் சந்திப்பை பற்றி பேசி இருக்கும் விராட் கோலி ” நான் அவரை முதன் முதலில் 2009ஆம் ஆண்டு சாம்பியன் டிராபியில் பார்த்தேன். அப்பொழுது அவர் ஹைபர்ஆக்டிவ் மற்றும் ஒரு குழப்பமான ஆள் போல எனக்குத் தெரிந்தார். இதுதான் முதல் சந்திப்பில் அவரைப் பற்றி எனக்குத் தோன்றிய அபிப்பிராயம். அவர் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த அறிவாற்றல் கொண்டவர். நான் அவருடன் விளையாட்டு பற்றி பேசுவதை விரும்புகிறேன். என்னுடைய கடினமான நேரத்தில் அவர் என்னிடம் பேசியிருக்கிறார். அவருக்கு ஒரு நல்ல குடும்பம் மற்றும் அழகான குழந்தைகள் உள்ளனர்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : அஸ்வின் கிட்ட ஹைதராபாத் தப்பிக்கிறது கஷ்டம்.. இந்த ஒரு காரணமே போதுங்க – ஆகாஷ் சோப்ரா தகவல்

தினேஷ் கார்த்திக்கின் மனைவியும் குவாஸ் வீராங்கனையுமான தீபிகா பல்லிகல் பேசும் பொழுது “ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் அவர் தன்னை புதுப்பித்துக் கொள்கிறார். நான் அவரைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன். மேலும் அவர் இப்பொழுது குடும்பத்தினர் எங்களுக்காக அதிகம் நேரம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எங்களுடைய குடும்பத்தில் ஒருவராக இருக்கும் அபிஷேக் நாயர், தினேஷ் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கை கொண்டிருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts