அஸ்வின் கிட்ட ஹைதராபாத் தப்பிக்கிறது கஷ்டம்.. இந்த ஒரு காரணமே போதுங்க – ஆகாஷ் சோப்ரா தகவல்

0
68
Ashwin

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணியில் மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்த போட்டி குறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசியிருக்கிறார்.

ராஜஸ்தான் அணியை பொறுத்தவரையில் மிகச் சிறப்பாக ஐபிஎல் தொடரை ஆரம்பித்து இரண்டாம் பகுதியில் மிக மோசமாக விளையாடி, புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் வருவதை தவறவிட்டது. மூன்றாவது இடம் பெற்று ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாடி வென்று இரண்டாவது தகுதிச் சுற்றுக்கு வந்திருக்கிறது.

- Advertisement -

தற்போது ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் இல்லாதது பின்னடைவாக இருக்கிறது. ஆனால் அதை ஈடு கட்டும் விதமாக அணியின் பந்துவீச்சாளர்கள் பிளே ஆப் சுற்றில் ஆர்சிபிக்கு எதிராக சிறப்பாக இருந்தார்கள். குறிப்பாக ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த நிலையில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி பற்றி பேசி உள்ள ஆகாஷ் சோப்ரா ” இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் யார் டாஸ் வென்றாலும் முதலில் பந்துவீச வேண்டும். அப்பொழுது ஆட்டம் அவர்கள் பக்கமாக சாய்ந்து விடும். ராஜஸ்தான் அணியை பொறுத்தவரையில் அவர்களது சுழல் பந்துவீச்சாளர்களுக்கு இந்த மைதானத்தில் சாதகம் இருக்கும். இந்த மைதானத்தில் அஸ்வினை விட யாரும் அதிக விக்கெட் எடுத்ததில்லை. கொஞ்சம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகம் இருந்தால் ராஜஸ்தான் ஸ்பின்னர்களை வைத்து எட்டு ஓவர்கள் வீசி ஆதிக்கம் செலுத்தும்.

மேலும் அஸ்வின் உடன் புதிய பந்தில் ட்ரெண்ட் போல்ட் மற்றும் சாகல் இருவரும் இருப்பார்கள். மேலும் சந்தீப் சர்மாவுக்கும் ஒரு முக்கிய பங்கு இருக்கும் என்று நினைக்கிறேன். அஸ்வின் தற்பொழுது சிறப்பாக பந்து வீசுகிறார் விக்கெட் வீழ்த்துகிறார். மேலும் அவர் பேட்டிங் செய்யும்பொழுது மேலே வந்தால் இந்த மைதானத்தில் ரன்களும் அடிக்க செய்வார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய கோச்சா வர கேஎல் ராகுல் தடுத்திட்டார்.. அரசியல் இருக்கும்னு சொன்னார் – ஜஸ்டின் லாங்கர் பேட்டி

ஜெய்ஸ்வால் இந்த ஐபிஎல் தொடரில் மும்பைக்கு எதிராக சிறப்பாக விளையாடிய சதம் அடித்திருந்தாலும் கூட, அவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடிய அதே தரத்தில் விளையாடவில்லை என்பதுதான் உண்மை. எதிர்பார்த்த அளவுக்கு அவருடைய கால்கள் சரியான முறையில் நகரவில்லை” என்று கூறியிருக்கிறார்.