சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெறுகிறாரா? என்பது குறித்து அவரே செய்துள்ள ட்வீட் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
தற்போது இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கிறது. இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக உள்நாட்டில் மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட இருக்கிறது.
விராட் கோலி ஓய்வா?
ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருடன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம் என்கின்ற செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. தேர்வுக் குழு தலைவர் அகர்கர் 2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா முழுமையாக கமிட் ஆகவில்லை என்று கூறி இருந்தார்.
இதன் காரணமாக விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் இருந்து ஆஸ்திரேலியா தொடருடன் ஓய்வு பெற்று விடுவார் என்கின்ற யூகங்கள் வலிமையாகியது. மேலும் பயிற்சியாளர் கம்பீர் இரண்டு வருடங்கள் இருப்பதால் உலகக் கோப்பை குறித்து பேசக்கூடாது எனக் கூறியது மேலும் சலசலப்பை உருவாக்கியது.
விராட் கோலி தந்த பதில்
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு இந்திய அணி புறப்பட்டது சென்று இருக்கிறது. நான்கு மாதங்களுக்குப் பிறகு லண்டனில் இருந்து இந்தியா திரும்பிய விராட் கோலி இந்திய அணியுடன் இணைந்து ஆஸ்திரேலியாவிற்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்திய அணி என்னோட ஃபேவரிட் கிடையாது.. எங்கள் திறமையை ஏற்கனவே காட்டிடோம்.. டிராவிஸ் ஹெட் சர்ச்சை கருத்து
இந்த நிலையில் அவர் செய்துள்ள ட்வீட்டில் ” நீங்கள் உண்மையில் தோற்கும் நேரம் எதுவென்றால், உங்களால் முடியாது என்று நீங்கள் விட்டுக் கொடுக்கும் போதுதான்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம் அவர் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை விட்டுக் கொடுக்க மாட்டார், தொடர்ந்து விளையாடி தன்னை நிரூபிப்பார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள். இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.






