இந்திய அணி என்னோட ஃபேவரிட் கிடையாது.. எங்கள் திறமையை ஏற்கனவே காட்டிடோம்.. டிராவிஸ் ஹெட் சர்ச்சை கருத்து

0
135

இந்திய கிரிக்கெட் அணி வருகிற 19ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்த போட்டித் தொடர் குறித்து ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் வீரரான டிராவிஸ் ஹெட் இந்த போட்டித் தொடரின் தீவிரத் தன்மை குறித்து சில கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

டி20 உலக கோப்பை தொடர்க்கும் மற்றும் ஒரு நாள் உலகக் கோப்பை தொடர்க்கும் தயாராகும் வகையில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இவை அனைத்தும் வருகிற 19-ம் தேதி முதல் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடர் மூலமாக இந்திய அணியை விட்டு சிறிது காலம் வெளியே இருந்த ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மீண்டும் அணிக்குள் இணைகிறார்கள்.

இது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் நம்பிக்கை நட்சத்திரமான டிராவிஸ் ஹெட் இந்த போட்டித் தொடர் குறித்த சில கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார். எப்போதுமே இந்திய அணிக்கு ஆபத்தாக இருக்கும் இவர், இந்திய அணி தனது ஃபேவரிட் அணி இல்லை எனவும் ஆனால் எப்போதுமே இந்தியா ஆஸ்திரேலியா தொடர் என்றால் போட்டித் தன்மை தீவிரமாக இருக்கும் எனவும் சில கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடுவதால் இந்திய அணி எனக்கு பிடித்தமான அணி என்று நினைக்கவில்லை. நாங்கள் அவர்களிடம் போதுமான அளவு விளையாடியதாகவே எனக்கு தோன்றுகிறது. கடந்த இரண்டு வருடங்களாகவே நான் நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்கிறேன். எனவே இந்த தொடருக்கு தயாராவது அவ்வளவு கடினமாக இருக்காது என்று தோன்றுகிறது.

இதையும் படிங்க:ஐபிஎல் 2026 ஏலம்.. சிஎஸ்கே அணி கண்டிப்பாக 26 வயது ஆஸி, வீரரை எடுக்கனும்.. அணி பட்டியலை வெளியிட்ட ஸ்ரீகாந்த்

இது மிகவும் போட்டித் தொடர்வாய்ந்த தொடராகும். இதற்காக நான் நன்றாக தயாராகி ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். மேலும் இந்த வெற்றிகரமான கோடை காலத்திற்கு முடிந்த அளவு தன்னால் பங்கு செய்ய முடியும் என்று நினைக்கிறேன்” என்று அவர் பேசி இருக்கிறார். இவரது கருத்துக்கு இந்திய அணி வருகிற தொடரில் தக்க பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -