“விராட் கோலி மாறவேயில்லை” – ரோகித் சர்மா பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேச்சு!

0
133
Rohit sharma

ஆசிய கோப்பையில் நாளை இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் ஒரு மிகப்பெரிய போட்டி காத்திருக்கிறது. எனக்காக இரு அணி ரசிகர்கள் மட்டுமல்லாது, உலக கிரிக்கெட் ரசிகர்களும் மட்டுமல்லாது, உலக கிரிக்கெட் அணிகளும் காத்திருக்கிறது. இந்தப் போட்டி உலக கோப்பைக்கு முன்பாக இந்தியா பாகிஸ்தான் என்ற இரு அணிகள் எந்த விதத்தில் எப்படி தயாராகி இருக்கின்றன என்பதை பிற அணிகளுக்கு காட்டும் என்பதால் இந்தப் போட்டி அதிக கவனத்தைப் பெற்றுள்ளது!

இந்தப் போட்டிக்காக இந்திய வீரர்கள் கடந்த புதன்கிழமையில் இருந்து ஐசிசி அகாடமி துபாய் மைதானத்தில் பயிற்சிகள் மேற்கொண்டு வந்தார்கள். ஓய்வுக்குப் பிறகு விராட் கோலி அணிக்குள் திரும்பிவந்து, பயிற்சி களத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டுவந்த காணொளிகள் நமக்கு பார்க்கக் கிடைத்தது.

- Advertisement -

மேலும் பயிற்சியின் போது இந்தியா பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையேயான நட்பு ரீதியான சந்திப்புகளும் உரையாடல்களும் சமூக வலைதளங்களை அதிர வைத்தன. இது மட்டும் அல்லாமல் என்று விராட் கோலியின் மனம்திறந்த பேட்டி ஒன்று வெளியானது. அதில் விராட் கோலி பலதரப்பட்ட விஷயங்களை மிகவும் வெளிப்படையாக பகிர்ந்திருந்தார். கடைசியாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசஸமுடன் தனக்கு உள்ள நட்பு வரை மிக விரிவாக பேசியிருந்தார்.

நாளை நடக்க இருக்கும் மிகப் பெரிய போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பத்திரிக்கையாளர் சந்திப்பை எதிர்கொண்டார். இந்த சந்திப்பின் போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. எல்லாக் கேள்விகளுக்கும் ரோகித் சர்மா தனது வழக்கமான நையாண்டி பாணியிலும், சில கேள்விகளுக்கு சீரியஸான பதில்களையும் கொடுத்தார்

இதில் பாகிஸ்தான் நிருபர் ஒருவர் கடந்த ஆண்டு பாகிஸ்தான் அணியோடு டி20 உலக கோப்பையில் ஏற்பட்ட தோல்வி குறித்து கேட்க அதற்கு ரோகித் சர்மா எனக்கு ஞாபக மறதி அதிகம் இதனால் நான் கடந்த ஆண்டு நடந்தது எல்லாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள மாட்டேன் எனக்கு ஞாபகத்தில் இருக்காது என்று அசால்டாக பதிலளித்து அங்கு சூழ்நிலையை சாதாரணமாக உருவாக்கினார்.

- Advertisement -

அடுத்து அவரிடம் ஒரு மாத ஓய்வுக்குப் பிறகு அணிக்குள் திரும்ப வந்திருக்கும் விராட்கோலி பற்றி கேள்விகள் முன்வைக்கப்பட்டன அதற்கு பதிலளித்த கேப்டன் ரோகித் சர்மா ” அவர் மிகவும் நல்ல தொடர்பில் இருப்பதாக உணர்ந்தேன். இவர் தனது பேட்டிங்கில் மிகவும் கடினமாக உழைக்கிறார். அவர் அப்படியேதான் இருக்கிறார் அவரிடம் அசாதாரணமாக நான் எதையும் பார்க்கவில்லை. கால இடைவெளிக்குப் பிறகு அவர் திரும்புவதால் நிறைய புத்துணர்ச்சியோடு இருக்கிறார். நல்ல தொடர்பில் இருக்கிறார். அவர் பயிற்சி செய்வதை நான் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்” என்று தெரிவித்தார்!

மேலும் தொடர்ந்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா வீரர்களின் மனச்சுமை மற்றும் பணிச்சுமை பற்றி விரிவாக பேசினார் அதில் அவர் ” நாம் இந்த விஷயங்களை தாமதமாக பேசுகிறோம். கோவிட் தொற்றுக்குப் பிறகு விராட் கோலிக்கு மட்டுமல்ல, எல்லா வீரர்களுக்குமே பபிளில் இருப்பது சிரமமான ஒன்றாக இருந்தது. இதனால் ஒரே இடத்தில் இருக்க வேண்டியிருந்தது வெளியில் போக முடியவில்லை. இது வீரர்களுக்கு சிரமத்தைக் கொடுத்தது. இவர்கள் மனதளவில் எப்படி இருக்கிறார்கள் அவர்கள் விளையாட்டை பற்றி எப்படி சிந்திக்கிறார்கள் என்று நாங்கள் தொடர்ந்து விவாதித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் தான் இருக்கிறோம்” என்று தெரிவித்தார்!