இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தம்பி இது அமித் மிஸ்ரா மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் வைத்த குற்றச்சாட்டுக்கு நேரடியாக பதில் அளித்து பேசி இருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி 11 போட்டிகளில் விளையாடி மொத்தம் 505 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் குவித்தவர்களுக்கான பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறார். ஆர்சிபி அணி ஏறக்குறைய இந்த ஆண்டு பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதிப்படுத்தியதற்கு விராட் கோலியின் பேட்டிங் மிக முக்கிய காரணமாக இருக்கிறது.
அமித் மிஸ்ரா கலந்து கொண்ட ஒரு தனியார் நிகழ்ச்சியில் விராட் கோலி முன்பு போல பழகுவதில்லை எனவும், அவர் ரோகித் சர்மா போல பழைய மாதிரியே இல்லை, பணமும் புகழும் வந்து விட்ட காரணத்தினால், தன்னிடம் வருகின்றவர்கள் ஏதாவது எதிர்பார்க்கிறார்கள் என்று நினைத்துக் கொள்கிறார் எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் ஒரு பேட்டியில் யுவராஜ் கூறும் பொழுது தற்போது விராட் கோலியுடன் தான் தொடர்பில் இல்லை எனவும், நம்பிருந்த விராட் கோலி சீக்குவாகவும், தற்போது இருக்கிற சீக்கு விராட் கோலி ஆகவும் இருக்கிறார்கள் எனவும், இருவருக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருப்பதாகவும் வருத்தத்துடன் கூறியிருந்தார்.
விராட் கோலி தன்னுடன் விளையாடிய மூத்த மற்றும் சமகால வீரர்களுடன் சரியான தொடர்பில் இல்லை என்பதாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. மேலும் பேசக்கூடிய வாய்ப்பில் இருந்தாலும் அவர் யாருடனும் பேசுவதில்லை என்றும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 18 வருட ஐபிஎல் வரலாறு..4 ஆண்டு குஜராத் படைத்த மாஸ் ரெக்கார்டு.. எந்த டீமும் செய்ய முடியாத சாதனை
இது குறித்து விராட் கோலி பேசும் பொழுது “நான் இவர்களுடன் எதுவும் வித்தியாசமாக நடந்து கொண்டது கிடையாது. ஏனென்றால் நான் என்னை வித்தியாசமாக நினைத்தது கிடையாது. நான் சந்திக்கும் அனைவருடனும் ஒரே மாதிரியாக இருக்கிறேன். சமீபத்தில் என்னுடன் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் அணியில் விளையாடிய ஸ்ரீவஸ்தவா மற்றும் அஜித் அர்கல் இருவருடனும் நிறைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டோம். இவர்கள் தற்போது ஐபிஎல் நடுவர்களாக இருக்கிறார்கள். மேலும் ஆரம்பத்தில் இணைந்து விளையாடிய யோமகேஷ் உடன் சமீபத்தில் நிறைய பேசிக் கொண்டிருந்தேன்” என்று கூறியிருக்கிறார்.