இந்திய பிரீமியர் லீக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு தனக்கு கிடைத்த ஆதரவு குறித்து இந்திய இளம் பேட்டர் மனம் திறந்து பேசியுள்ளார்.
ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டது மற்றும் அதற்கு விராட் கோலி அளித்த ஆதரவு குறித்து பேசிய அவர், அணி நிர்வாகம் மற்றும் முன்னணி வீரர்களின் நம்பிக்கை தனக்கு மிகுந்த உற்சாகத்தை தந்ததாக கூறியுள்ளார்.
முன்னாள் கேப்டன் விராட் கோலி தனக்கு அளித்த ஆதரவு மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றும், அணியை வழிநடத்தும் பொறுப்பில் இருந்தபோது அவரது வழிகாட்டுதல் தனக்கு பெரிதும் உதவியாக இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரஜத் படிதார் கூறும்போது “உங்கள் ரோல் மாடல் உங்களை சப்போர்ட் செய்தால் உங்களுக்கு வேறு எதுவும் தேவையில்லை. உங்களுக்கு வேறு யாருடைய சப்போர்ட்டும் தேவைப்படாது. நான் பேட்டிங் செய்யும்போது அவரது அனைத்து விஷயங்களையும் கவனிப்பேன். மைதானத்தில் அவர் என்ன செய்கிறார் என்பதில் இருந்து மைதானத்திற்கு வெளியே அவரது ரூட்டின் என்னவாக இருக்கிறது என்பது வரை அனைத்தையும் கவனிப்பேன். பின்னர் தான் கேப்டன்சி விஷயத்தில் அவர் என்னை அதிக அளவில் சப்போர்ட் செய்தார் என்பது எனக்கு தெரிய வந்தது,” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய படிதார் “ரசிகர்கள் மற்றும் அவர்களின் எதிர்பார்ப்புகளை கருத்தில் கொண்டு ஒருவருக்கு ஆர்சிபி கேப்டன்சியை கொடுப்பது எளிதான விஷயம் அல்ல. அவர் என்னிடம் ஏதோ ஒன்றை பார்த்திருக்க வேண்டும். அது என்னவென்று எனக்கு தெரியவில்லை, ஆனால் அணியில் ஒரு பிளேயராகவும் கேப்டனாகவும் அவரிடம் இருந்து எனக்கு அதிக சப்போர்ட் கிடைத்தது,” என்று கூறி இருக்கிறார்.