18 வருட ஐபிஎல் வரலாறு..4 ஆண்டு குஜராத் படைத்த மாஸ் ரெக்கார்டு.. எந்த டீமும் செய்ய முடியாத சாதனை

0
85
Gill

நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி 18 வருடங்களாக விளையாடி வரும் அணிகளை தாண்டி மிக பிரம்மாண்டமான சாதனையை படைத்து அசத்தியிருக்கிறது.

ஐபிஎல் தொடர் வரலாற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணி மொத்தமாக நான்கு வருடங்கள் மட்டுமே விளையாடி இருக்கிறது. இதில் பங்கு பெற்ற முதல் சீசனிலேயே கோப்பையை வென்று அசத்தியது. மேலும் இரண்டாவது சீசனில் இறுதிப் போட்டிக்கு சென்று கோப்பையை சிஎஸ்கே அணியிடம் இழந்தது. இந்த ஆண்டு நான்காவது சீசனில் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பில் பிரகாசமாகவும் கோப்பையை வெல்லும் வாய்ப்பில் பிரகாசமாகவும் இருக்கிறது.

- Advertisement -

நெக்ரா போட்டுக் கொடுத்த பாதை

கடந்த முறைக்கும் முன்பு நடைபெற்ற மெகா ஏலத்தில் குஜராத் ஆசிஸ் நெக்ரா உருவாக்கினார். அப்பொழுது அந்த பேட்டிங் யூனிட்டில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இல்லை. மேலும் சாய் சுதர்சன் போன்ற இளம் வீரர்களை கொண்டு வந்தார். அதே சமயத்தில் பௌலிங் யூனிட் வலிமையாக வைத்தார். எக்கச்சக்க பினிஷர்களை வைத்துக்கொண்டார்.

இதன் காரணமாக இந்த அணி பத்தாவது இடத்தை புள்ளி பட்டியலில் பிடிக்கும் என அப்போது பலராலும் கணிக்கப்பட்டது. ஆனால் எல்லாக் கணிப்புகளையும் உடைத்து குஜராத் டைட்டன்ஸ் கோப்பையை முதல் சீசனிலேயே என்று சாதித்தது. தற்போதும் இதே பாதையில்தான் ஆசிஸ் நெக்ரா குஜராத் டைட்டன்ஸ் அணியை உருவாக்கியிருக்கிறார். இந்த அணியும் அபாரமான முறையில் செயல்பட்டு வருகிறது.

- Advertisement -

குஜராத்தின் பிரம்மாண்ட சாதனை

இதுவரை 18 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் ஒரு சீசனில் ஒரு அணியின் மூன்று வீரர்கள் 500 ரன்கள் தாண்டி எடுத்தது கிடையாது. ஆனால் இந்த முறை குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் கில், சாய் சுதர்சன் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் 500 ரன்கள் தாண்டி, ஒரு சீசனில் ஒரு அணியின் மூன்று பேட்ஸ்மேன்கள் 500 ரன்கள் தாண்டிய புதிய மெகா சாதனையை படைத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. தீபக் சாஹரை வறுத்து எடுத்த கவாஸ்கர்.. உங்களுக்கு மன்னிப்பே கிடையாது என பேச்சு

தற்போது சாய் சுதர்சன் 509 ரன்கள் இரண்டாவது இடம், கேப்டன் கில் 508 ரன்கள் மூன்றாவது இடம், ஜோஸ் பட்லர் 500 ரன்கள் ஐந்தாவது இடம் என அதிக ரன்கள் குவித்தவர்களுக்கான பட்டியலில் இருக்கிறார்கள். முதல் இடத்தில் சூரியகுமார் யாதவ் 510 ரன்கள், நான்காவது இடத்தில் விராட் கோலி 505 ரன்கள் உடன் இருக்கிறார்கள்.

- Advertisement -