அஸ்வின் ஆஸி வந்ததுமே முடிவெடுத்துட்டார்.. நான் சமாதானப்படுத்தி ஆட வச்சேன்.. இதான் காரணம் – ரோகித் சர்மா பேட்டி

0
1450

இந்திய அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்றதற்கான காரணம் குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா வெளிப்படையான சில விஷயங்களை பேசி இருக்கிறார்.

இன்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்த பொழுது இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ஓய்வு முடிவை வெளியிட்டார். பிறகு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் சேர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பை எதிர்கொண்டார்கள்.

- Advertisement -

அஸ்வின் காரணத்தை சொல்வார்

இது குறித்து கேப்டன் ரோகித் சர்மா பேசும்பொழுது “அஸ்வின் பற்றி பேசும் பொழுது அவர் எடுத்த முடிவில் அவர் மிகவும் உறுதியாக இருந்தார். மேலும் பெர்த் முதல் டெஸ்ட் போட்டியில் நான் மூன்று நாட்கள் கழித்துதான் அணி உடன் வந்து சேர்ந்தேன். ஆனால் அவர் அப்பொழுதே இந்த முடிவை எடுத்து விட்டார். இதற்குப் பின்னால் நிறைய விஷயங்கள் இருக்கிறது. அஸ்வின் அவருடைய நிலைக்கு சென்ற பிறகு இதுகுறித்து விரிவாக பேசுவார் என்று நினைக்கிறேன்”

“அணி என்ன நினைக்கிறது என்று அவருக்கு புரிகிறது. அணி எந்த கலவையில் விளையாட நினைக்கிறது என்பதும் அவருக்கு புரிகிறது. நாங்கள் இங்கு வந்த பொழுது எந்த சுழல் பந்துவீச்சாளரை விளையாட போகிறோம் என்று எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் சூழ்நிலையை பார்த்து முடிவு எடுக்க விரும்பினோம். நான் பெர்த் வந்த பிறகு அடுத்து பின் பந்து டெஸ்டில் விளையாட வேண்டும் எனக் கூறி அஸ்வினை சமாதானப்படுத்தி இருக்க வைத்தேன்”

- Advertisement -

நான் தேவை இல்லையா செல்கிறேன்

“அஸ்வின் இந்த முடிவுக்கு எங்கிருந்து வந்திருக்கிறார் என்று புரிகிறது. நான் இந்த தொடருக்கு அணிக்கு தேவைப்படவில்லை என்றால் நான் ஓய்வு பெறுவதே சிறந்த முடிவு என அவர் நினைத்திருக்கிறார். வெளிப்படையாக நாம் இன்னும் மெல்போர்னுக்கு செல்லவில்லை. அங்கு சூழ்நிலை எப்படி இருக்கும் என்றும் தெரியவில்லை”

இதையும் படியுங்க : 2-1னு இருந்திருக்கணும்.. எல்லாம் போச்சு.. அடுத்த டெஸ்டுக்காக வெயிட் பண்ண முடியல – பேட் கம்மின்ஸ் பேச்சு

“அங்கு யாரை கொண்டு விளையாடுவோம் என்பதும் தெரியாது. இருந்த போதும் அஸ்வின் தற்பொழுது ஓய்வு பெறுவதற்கு விரும்புகிறார். நாம் அவருடைய எண்ணத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். நாம் அவருடைய முடிவுக்கு உடன் நிற்க வேண்டும். அவர் இந்திய அணிக்காக மிகப்பெரிய மேட்ச் வின்னராக இருந்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -