ஐசிசி 9வது டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் வென்ற விராட் கோலி இதுவே தன்னுடைய கடைசி சர்வதேச டி20 போட்டி என அறிவித்திருக்கிறார்.
இன்று டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் டாப் ஆர்டர் ரோகித் சர்மா ரிஷப் பண்ட் மற்றும் சூரியகுமார் யாதவ் மூவரும் இந்த போட்டியில் இந்திய அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார்கள்.
மிகவும் நெருக்கடியான இந்த நிலையில் விராட் கோலி மற்றும் அக்சர் படேல் சிறப்பாக விளையாடினார்கள். அக்சர் படேல் 31 பந்தில் 47 ரன்கள், விராட் கோலி 59 பந்தில் 76 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. பேட்டிங் செய்யும் ஆடுகளத்தில் இந்திய அணியின் ஸ்கோர் கொஞ்சம் குறைவாகவே இருந்தது.
இதற்கு அடுத்து தென் ஆப்பிரிக்கா அணி ஒரு கட்டத்தில் கடத்தி நான்கு ஓவர்களுக்கு 26 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கைவசம் ஐந்து விக்கெட்டுகளை வைத்திருந்தது. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவின் 17ஆவது ஓவரில் ஹென்றி கிளாசன் 27 பந்தில் 52 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, தென் ஆப்பிரிக்க அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 169 மட்டுமே எடுத்தது. இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது.
இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலி பேசும் பொழுது “இதுவே எனது கடைசி டி20 உலகக்கோப்பை போட்டி. நாம் அடைய விரும்பும் விஷயம் மிகச் சரியாக இருக்கிறது. சில நாட்கள் நீங்கள் ரன் எடுக்க முடியும் சில நாட்கள் ரன்கள் எடுக்க முடியாது. இது நடந்து தான் தீரும். கடவுள் என் மேல் மிகவும் கருணை உள்ளவராக இருந்திருக்கிறார். இனி இந்தச் சந்தர்ப்பம் எப்பொழுதும் கிடையாது. என்னுடைய இந்திய அணிக்கான கடைசி டி20 போட்டி இதுதான். நாங்கள் கோப்பையை வெல்ல விரும்பினோம். இது ஒரு வெளிப்படையான ரகசியம். தோற்றே இருந்தாலும் இதுதான் கடைசிப் போட்டி.
இதையும் படிங்க : 24 பந்து 26 ரன்.. தெ.ஆ-வை நிற்க வைத்து மேஜிக் செய்த இந்தியா.. 13 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டத்தை வென்றது
அடுத்த தலைமுறை டி20 கிரிக்கெட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டிய நேரம் இது. ஐசிசி தொடர்களில் வெற்றி பெறுவதற்கு நாங்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறோம். ரோகித் போன்ற ஒருவரை பாருங்கள் அவருக்கு இது 9வது டி20 உலகக் கோப்பை. எனக்கு 6வது டி20 உலகக் கோப்பை. ரோகித் சர்மா இதற்கு மிகவும் தகுதியானவர். இந்த நேரத்தில் உணர்ச்சிகளைத் தடுத்து நிறுத்துவது கடினம். இது ஒரு அற்புதமான நாள். நான் எல்லாவற்றுக்கும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.