நாளை நடைபெற உள்ள ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாட உள்ளன.
இந்த சூழ்நிலையில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி எதற்காக சர்வதேச டி20 கிரிக்கெட் பார்மெட்டில் இருந்து ஓய்வு பெற்றதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.
டி20 தொடரில் இருந்து ஓய்வு
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்துவரும் விராட் கோலி கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி உலக கோப்பையை வென்ற பின்னர் டி20 ஃபார்மேட்டில் இருந்து முடிவு பெறுவதாக அறிவித்தார். அதற்குப் பின்னர் இந்திய அணியில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் பார்மெட்டில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்தியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு டி20 கிரிக்கெட் லீக் தொடரான ஐபிஎல் தொடரில் மட்டும் பெங்களூர் அணிக்காக விராட் கோலி தொடர்ந்து விளையாடி வருகிறார். ஆனால் இவரது ஆட்டம் எந்த வகையிலும் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் வீரர்களுக்கு சவால் அளிக்கும் வகையில் சிறப்பான முறையில் இருந்து வருகிறது.
விராட் கோலி கூறும் காரணம்
மேலும் இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி விளையாடும் விதத்தை பார்க்கும் போது அவர் இந்திய அணியில் இன்னும் விளையாடுவதற்கான தன்மையை கொண்டிருக்கிறார் என கூறி இருந்தார். பெங்களூர் அணிக்காக இதுவரை சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி ஆறு போட்டிகளில் நான்கு போட்டிகளில் அரை சதம் அடித்து பெங்களூர் அணியில் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் எதற்காக தான் சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெற்றேன் என்பதற்கான காரணத்தை கூறுகிறார்.
இதையும் படிங்க:இப்பதான் பிரகாசமா இருக்கு.. சூரியகுமாரை வைத்து மீண்டும் கோலியிடம் வம்பு இழுத்த மஞ்ச்ரேக்கர்.. என்ன நடக்கிறது?
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “எனக்கு எந்த விதத்திலும் நான் டி20 கிரிக்கெட் விளையாடும் நிலையில் இருந்து மாறிவிட்டதாக நினைக்கவில்லை. தற்போது புதிய வீரர்கள் இந்திய அணியில் தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்குப் போதிய நேரம் தேவை அழுத்தத்தை கையாள்வதற்கு, உலகின் பல்வேறு பகுதிகளில் விளையாடுவதற்கு, மேலும் அவர்கள் சிறப்பாக செயல்படுவதற்கு போதுமான நேரம் தேவை. அடுத்த உலகக் கோப்பை தொடர் வரும்போது போதுமான அளவு ஆட்டங்களை விளையாட அவர்கள் தயாராக இருப்பதாக உணரும் அளவுக்கு இரண்டு வருட சுழற்சி தேவை என்பதை நான் முழுமையாக புரிந்து கொண்டே டி20 தொடரில் இருந்து விலக முடிவை எடுத்தேன்” என பேசி இருக்கிறார்.






