அஸ்வினை அணியில் சேர்க்காததற்கு புதுசா ஒரு காரணம் சொன்ன விராட் கோலி

0
642
Virat Kohli and Ravichandran Ashwin

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று டெஸ்ட்கள் முடிந்த நிலையில் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க lord’s வெற்றிக்குப் பிறகு இந்திய அணி தொடர்ந்து சொதப்பி வந்தது. குறிப்பாக மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 78 ரன்களுக்கு மொத்த இந்திய அணியும் ஆல் அவுட் ஆனது. இதனால் இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. இந்திய அணியின் இந்த மோசமான ஆட்டத்திற்கு காரணமாக மிடில் ஆர்டர் இடம் இருந்து ரன்கள் வராதது பெரிய காரணமாக சொல்லப்பட்டது.

அதைவிட பெரிய காரணமாக பேசப்பட்டது இந்திய அணியின் பிரதான ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வினை அணியில் சேர்க்காதது தான். கடந்த ஜூலை மாதம் இதே ஓவல் மைதானத்தில் அஸ்வின் கவுன்டி போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அதனால் இன்றைய ஆட்டத்தில் அஸ்வின் ஆடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைக்கும் அஸ்வினை அணியில் சேர்க்கவில்லை.

- Advertisement -

கடந்த முறை ஆடிய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்தாலும் அது முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சை மையப்படுத்தியே இருந்தது. இஷாந்த் மற்றும் ஷமிக்கு பதிலாக தாகூர் மற்றும் உமேஷ் புதிதாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனாலும் அஸ்வின் அணியில் இல்லாதது ரசிகர்களுக்கு பெரிய வருத்தத்தை கொடுத்தது. அஸ்வின் ஏன் அணியின் இல்லை என்ற கேள்விக்கு டாஸ் போடும் சமயத்தில் விராட் கோலி பதிலளித்தார்.

இங்கிலாந்து அணியில் நான்கு இடதுகை படை வீரர்கள் இருப்பதால் ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று விராட் கோலி கூறியுள்ளார். இது தான் சமூக வலைதளங்களில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. வலதுகை ஆஃப் ஸ்பின்னரான அஸ்வின் பலமுறை இடதுகை ஆட்டக்காரர்களை எளிதாக அவுட் ஆக்கி உள்ளார். அப்படி இருந்தும் ஜடேஜா தான் இடதுகை ஆட்டக்காரர் களுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசுவார் என்று கூறியது பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது மிகவும் சொற்ப ரன்களுக்கு ரகானே மீண்டும் அவுட்டாகி உள்ளதால் ரஹானேவின் துணை கேப்டன் பதவியை அஸ்வினிடம் கொடுத்துவிட்டு, அஸ்வினை இனிமேல் தொடர்ந்து அத்தனை ஆட்டங்களுக்கும் எடுக்க வேண்டும் என்று ரசிகர்களின் குரல் சமூக வலைதளங்களில் வலுப்பெற்று வருகிறது.

- Advertisement -