ஆடவே முடியல.. பயிற்சியில் விரக்தி அடைந்த விராட் கோலி.. நாளை அவரை சமாளிப்பாரா? என்ன நடந்தது?

0
827
Virat

நடக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சூப்பர் 8 சுற்றில் முதல் போட்டியில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இதற்காக இந்திய அணி முழுமையாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் பயிற்சியின் போது விராட் கோலிக்கு கவலை அளிக்கக்கூடிய விஷயங்கள் தொடர்ந்து ஏற்பட்டிருக்கின்றன.

நேற்றைய வலைப்பயிற்சியில் குல்தீப் யாதவ் மிக முக்கியமான பந்துவீச்சாளராக நீண்ட நேரம் வந்து வீசி பயிற்சி பெற்றிருக்கிறார். குறிப்பாக அவர் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவருக்கும் தொடர்ச்சியாக பந்துகள் வீசி இருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி குல்தீப் யாதவ் பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடிய பொழுது சில பந்துகளைத் தவற விட்டாலும் கூட, மற்றபடி பேட்டில் நடுப்பகுதியில் பல பந்துகளை வாங்கி மிகச் சிறப்பாக அடித்திருக்கிறார். அதற்கு முன்பாக த்ரோட் டவுன் வீச சொல்லி நிறைய பந்துகளை லாங் ஹிட் அடித்திருக்கிறார்.

இந்த நிலையில் த்ரோ டவுன் முடிந்து வலையில் பந்துவீச்சாளர்களை சந்தித்து விளையாடும் பொழுது விராட் கோலிக்கு இடதுகை வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமதுவை எதிர்கொண்டு விளையாடுவது மிகவும் கடினமாக இருந்திருக்கிறது. பந்து பேட்டில் நிறைய எட்ஜ் எடுத்திருக்கிறது மேலும் அவர் தவற விட்டும் இருக்கிறார். இதன் காரணமாக நேற்றைய பயிற்சியில் விராட் கோலி விரக்தி அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

இது சம்பந்தமாக பிடிஐ செய்தியில் கூறும்பொழுது “விராட் கோலி ரன்கள் எடுக்க பயிற்சியில் விரும்பினார். இதன் காரணமாக அவர் பந்துகளை நீண்ட தூரம் அடித்து பயிற்சி செய்தார். மேலும் த்ரோ டவுன் முடிந்து அவர் வலையில் குல்தீப் யாதவ் மற்றும் கலீல் அகமது இருவரையும் எதிர்கொண்டார். குல்தீப் யாதவ் பந்துகளை சிறப்பாக விளையாடிய அவரால் கலீல் அகமது பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாட முடியவில்லை. இதன் காரணமாக அவர் விரக்தி அடைந்தார்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க : மிரட்டும் மழை அச்சுறுத்தல்.. நாளை இந்தியா ஆப்கான் போட்டியை நடக்க விடுமா.. வாய்ப்புகள் எப்படி இருக்கிறது?.. முழு தகவல்கள்

தற்போது ஆப்கானிஸ்தான் அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் பசருல்லா பரூக்கி மிகச் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் அவரே அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளராகவும் தொடர்கிறார். எனவே விராட் கோலி இவரை எதிர்த்து எப்படி விளையாடுவார்? என்கின்ற கவலை உருவாகி இருக்கிறது. மேலும் அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இடதுகை வேகம் பந்துவீச்சாளர் நெட்ரவால்கர் பந்துவீச்சில் விராட் கோலி கோல்டன் டக் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -