மிரட்டும் மழை அச்சுறுத்தல்.. நாளை இந்தியா ஆப்கான் போட்டியை நடக்க விடுமா.. வாய்ப்புகள் எப்படி இருக்கிறது?.. முழு தகவல்கள்

0
392
T20iwc2024

ஐசிசி 9வது டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் துவங்குகின்றன. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா அணிகள் விளையாடுகின்றன. நாளை இரண்டாவது போட்டியில் இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் பார்படாஸ் மைதானத்தில் மோதிக் கொள்கின்றன. ஆனால் இந்த போட்டியில் மழை வாய்ப்பு அச்சுறுத்தக் கூடிய வகையில் இருக்கிறது.

முதல் சுற்றில் இருந்து மொத்தம் எட்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. இதில் முதல் பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடம் பிடித்திருக்கின்றன. மற்றொரு பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா அணிகள் இடம் பிடித்திருக்கின்றன.

- Advertisement -

நாளை பார்படாஸ் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுகிறது. இங்கு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பொழுது ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்து 201 ரன்கள் குவித்தது. அதே சமயத்தில் சுழல் பந்துவீச்சிக்கும் சாதகம் உண்டு.

அமெரிக்காவில் பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமான ஆடுகளத்தில் இந்திய அணிகாரணத்தினால் சோர்வாக இருந்த இந்திய ரசிகர்கள், நாளைய போட்டிக்கு நல்ல ஆடுகளம் கிடைக்கும் என்பதால் மகிழ்ச்சியாக இருந்தார்கள். இந்த நிலையில் நாளைய போட்டியில் மழை முக்கியமான பங்கை வதிக்கும் என பார்படாஸ் வானிலை அறிக்கை கூறுவது கவலை தருகிறது.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நேரப்படி காலை 10:30 மணிக்கு போட்டி துவங்குகிறது. இந்த நேரத்தில் 44% மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் பிற்பகல் ஒரு மணி அளவில் 60% மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உண்டு என கூறப்படுகிறது.

இதையும் படிங்க : எங்களை யாருமே கண்டுக்க மாட்டேங்கிறீங்க.. ஆனா நாங்க யாரையும் தோக்கடிப்போம் – அமெரிக்கா ஆரோன் ஜோன்ஸ் பேட்டி

போட்டி நடைபெறும் முழுவதும் கருமேகங்கள் சூழ்ந்து இருக்கும் எனவும், வெப்பநிலை ஆரம்ப கட்டத்தில் 31 டிகிரி செல்சியஸ் இருக்கும் எனவும், மேலும் காற்றில் ஈரப்பதம் மிக அதிகபட்சமாக 71% இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக வீரர்கள் டி20 கிரிக்கெட்டிலேயே அதிகம் களைப்படையவும் வாய்ப்பு உண்டு. மேலும் நாளைய போட்டி குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டியாகவும் நடைபெற்று முடிவு தெரிய வாய்ப்புகள் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -