நவீன் உல் ஹக்கை வச்சு செய்த கோலி ரசிகர்கள்! மீண்டும் அவமானப்படுத்திய நவீன்..திருப்பி கொடுத்த ரிங்கு சிங்

0
1059

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிக முக்கியமான ஆட்டத்தில் கொல்கத்தா அணியும் லக்னோ அணியும் மோதின. இந்த போட்டியில் லக்னோ அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப்க்கு செல்ல முடியும் என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டிருந்தது.

- Advertisement -

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 176 ரன்களுக்கு எட்டு விக்கெட் எடுத்தது. இதனை அடுத்து களம் இறங்கிய கொல்கத்தா அணியில் அதிரடியாக விளையாடி ரிங்கு சிங் 33 பந்துகளில் 67 ரன்கள் விளாசினார்.

இதன் மூலம் கே கே ஆர் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த ஆட்டத்தில் லக்னோ அணி சார்பாக நவீன் விளையாடினார். நவீன் உல் ஹக்கிற்கும் விராட் கோலிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட சம்பவத்தை வைத்து அவர் செல்லும் இடமெல்லாம் அவரை விராட் கோலி ரசிகர்கள் சீண்டி வருகின்றனர்.

நேற்றைய ஆட்டத்தில் நவீன் உல் ஹக் பந்து வீசும்போது எல்லாம் ரசிகர்கள் கோலி,கோலி என்று கத்தி அவரை வெறுப்பேற்றினர். இதனால் நவீன் 4 ஓவர் வீசி  46 ரன்கள் விட்டுக் கொடுத்தார். விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. நவீன் பில்டிங் செய்யும் போதெல்லாம் ரசிகர்கள் அவரை வம்புக்கு இழுத்தனர்.

- Advertisement -

இந்த நிலையில் கடுப்பான நவீன் கே கே ஆர் அணி விக்கெட்டை இழந்த போது ரசிகர்களை பார்த்து வாயை மூடுங்கள் என வாயில் கை வைத்து செய்கை செய்தார். அது ரசிகர்களை மீண்டும் வெறுப்படையச் செய்தது. இதற்கு பதிலடி தரும் விதமாக கேகேஆர் அணி வீரர் ரிங்கு சிங் 110 மீட்டர்  தூரத்தில் நவீன் ஒவரில் சிக்ஸர் விளாசினார்.

இதனால் நவீன் தேவையில்லாமல் வாயை விட்டுட்டோமோ என்று மைதானத்தில் தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தினார். நவீன் பந்துவீசி அதிக ரன்கள் சென்றது விராட் கோலி ரசிகர்கள் மாம்பழம் சாப்பிட்டு கொண்டாடி அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்.