டி20 உகோ இந்தியா வருவீங்களா?.. நான் பதில் சொல்றது பாதுகாப்பானது இல்லை.. இதுதான் நிலைமை – லிட்டன் தாஸ் பேட்டி

0
18
Dos

அடுத்து நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணி இந்தியா வந்து விளையாடுமா? என்ற கேள்விக்கு அந்த அணியின் முன்னணி வீரர் லிட்டன் தாஸ் மிக முக்கியமான பதிலை அளித்திருக்கிறார்.

தற்போது பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் இந்தியா வந்து டி20 உலகக் கோப்பை விளையாட முடியாது எனவும் தங்கள் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் எனவும் ஐசிசி அமைப்பிடம் முறையிட்டு வருகிறது.

- Advertisement -

இறுதி முடிவு என்ன?

அதே சமயத்தில் ஐசிசி பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கைக்கு அனுமதி கொடுக்கவில்லை. கட்டாயம் பங்களாதேஷ் அணி இந்தியா சென்று விளையாட வேண்டும் என்று கூறியிருக்கிறது. ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐசிசி வெளியிடவில்லை.

ஒருவேளை பங்களாதேஷ் அணி இந்தியா வந்து விளையாட மறுத்து தொடரை விட்டு வெளியேறினால், அவர்களுக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணியை உள்ளே கொண்டு வருவதற்கு ஐசிசி முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கிறது. இது குறித்து தற்பொழுது மிகவும் குழப்பமான சூழ்நிலையே காணப்படுகிறது.

- Advertisement -

லிட்டன் தாஸ் கருத்து

இதுகுறித்து பேசி உள்ள லிட்டன் தாஸ் கூறும் பொழுது ” என்னால் இப்போது இதற்கு பதில் சொல்ல முடியாது. அது பாதுகாப்பானது கிடையாது. தற்போது வரை எங்கள் வீரர்கள் அனைவரும் பங்களாதேஷ் பிரிமியர் லீக்கில் விளையாடிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் உலக கோப்பையில் எங்கு விளையாடுவோம் யாருக்கு எதிராக விளையாடுவோம் என்பது குறித்து எங்களுக்கு எதுவுமே தெரியாது. உங்களைப் போலவேதான் நாங்களும் இருக்கிறோம்”

இதையும் படிங்க : நியூசி முதல் டி20.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. திலக் இடத்தில் யார்?.. பேட்டிங் வரிசையின் மாற்றம் – முக்கிய முடிவுகள்

“இந்தியா சென்று விளையாட முடியாது என்று முடிவு செய்வதற்கு முன்பாக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் வீரர்களுடன் எதுவும் கலந்து ஆலோசிக்கவில்லை. சில நேரங்களில் உங்களுக்கு சிறந்த முடிவுகள் அமையாது. ஆனாலும் நீங்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டியது இருக்கும். தற்போது அப்படியான சூழ்நிலைதான்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -