WPL ஆர்சிபி சாம்பியன்.. உடனே வீடியோ காலில் வந்த விராட் கோலி.. மைதானத்தில் செம சம்பவம்

0
726
RCB

இன்று பெண்கள் கிரிக்கெட் டி20 லீக் டபிள்யுபிஎல் பைனலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்து அதிரடியாக விளையாடியது. பவர் பிளேவில் விக்கெட்டை தராமல் 60 ரன்கள் தாண்டியது. ஆனால் ஏழாவது ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்து, அங்கிருந்து சரியாக ஆரம்பித்த டெல்லி அணி 18.3 ஓவரில் 113 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு துவக்க வீராங்கனைகள் சராசரியான ஒத்துழைப்பை தர, கடைசி ஓவரில் மூன்று பந்துகளை மீதம் வைத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி இரண்டாவது சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்றது.

பிரான்சிசைஸ் டி20 லீக்கில் இந்த வருடத்தோடு சேர்த்து ஆர் சி பி அணி 17 வருடங்களாக விளையாடி வருகிறது. ஆனால் இதுவரையில் ஒரு முறை கூட பட்டத்தை அந்த அணி வென்றது கிடையாது. இதனால் சமூக வலைதளங்களில் மிக அதிக கேலிக்கு உள்ளாக்கப்பட்ட அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இருக்கிறது.

இந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆர்சிபி பெண்கள் கிரிக்கெட் அணி இன்றைய போட்டியில் டெல்லி அணியை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தி இருக்கிறது. உலகெங்கும் இருக்கும் ஆர்சிபி ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. இதன் காரணமாக இந்த வெற்றியை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள்.

- Advertisement -

இதற்கு முன்பாக ஆண்கள் ஆர்சிபி அணி 2009, 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது. இந்த மூன்று முறையும் இரண்டாவது பேட்டிங் செய்து ஆர்சிபி அணி தோல்வி அடைந்து சாம்பியன் பட்டத்தை இழந்தது. ஆனால் இந்த முறை ஆர்சிபி பெண்கள் கிரிக்கெட் அணி இரண்டாவது முறையாக பேட்டிங் செய்து இலக்கை விரட்டி வென்று வரலாற்றை மாற்றி எழுதி இருக்கிறது.

இதையும் படிங்க : WPL பைனல்.. முடிந்தது 16 வருட சோகம்.. ஆர்சிபி டெல்லியை வீழ்த்தி சாம்பியன்.. முதல் பட்டம் வந்தது

இந்த நிலையில் இந்த போட்டியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த ஆண்கள் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி உடனடியாக வீடியோ கால் செய்து சாம்பியன் பட்டத்தை வென்ற வீராங்கனைகளுக்கு தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். ஏற்கனவே வென்ற மகிழ்ச்சியில் இருந்த ஆர்சிபி வீராங்கனைகளுக்கு, விராட் கோலி வந்தது மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது.