தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் லெஜன்ட் ஏபி டிவில்லியர்ஸ் ஐசிசி ஆல் ஆஃப் ஃபேமில் இடம் பெற்றார். இதற்கு அவருடைய நண்பரான விராட் கோலிகடிதம் எழுதி தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய இருவரும் சிறிது காலத்திலேயே மிகவும் நெருங்கிய நண்பர்களாக மாறினார்கள். தற்போது ஏபி டிவில்லியர்ஸ் ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட பிறகும் அவர்களது நட்பு தொடர்கிறது.
விராட் கோலி தன்னுடைய வாழ்த்தில் கூறும் பொழுது ” நீங்கள் இதற்கு முற்றிலும் தகுதியானவர். ஹால் ஆஃப் ஃபேம் என்பது நீங்கள் கிரிக்கெட்டில் செலுத்திய தாக்கத்திற்கு கொடுத்த பிரதிநிதித்துவம் ஆகும். உங்களுடைய திறமை தனித்துவம் ஆனது. உங்களை எப்பொழுது மக்கள் நியாபகத்தில் வைத்திருப்பார்கள்”
“என்னுடன் விளையாடியதில் நீங்கள்தான் திறமையான வீரர். நீங்கள் தான் நம்பர் ஒன். கிரிக்கெட் மைதானத்தில் நீங்கள் விரும்பியதைச் செய்ய முடியும் என்று அசாத்திய நம்பிக்கை கொண்டவர். ஆனால் நீங்கள் அதை சாதாரணமாகவே செய்தீர்கள். அதனால்தான் நீங்கள் இந்த நிலைக்கு உயர்ந்து இருக்கிறீர்கள்”
“ஒருமுறை நரைன் பந்துவீச்சை கணிக்க முடியவில்லை என்று சொன்னீர்கள். அப்பொழுது இரண்டு ரன் எடுக்க வேண்டிய இடத்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்தீர்கள். திரும்பவும் நரை வரும்பொழுது நீங்கள் சிங்கிள் எடுப்பீர்கள் நான் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் அப்பொழுது 94 மீட்டருக்கு ஸ்வீப் ஷாட் மூலம் ஸ்கொயர் லெக்கில் அவரை சிக்ஸர் அடித்தீர்கள். அப்போது எனது ஆச்சரியத்தை கற்பனை செய்து பாருங்கள்”
இதையும் படிங்க : தோனி ரெய்னா இல்லை.. எனக்கு மிகவும் பிடித்த அதிரடி பேட்ஸ்மேன் இவர்தான் – சிஎஸ்கே வீரர் கொடுத்த சர்ப்ரைஸ்
“எனக்கு ஒரு பந்துவீச்சாளர் எதிர்க்கொள்ள கடினமாக இருந்தால் நான் சிங்கிள் எடுத்து நகர்ந்து விடுவேன். ஆனால் நீங்களோ 94 மீட்டருக்கு சிக்ஸர் எடுத்தீர்கள். இப்படி எல்லாம் உங்களால் செய்ய முடியும் என்று நீங்கள் நம்பி அதை செய்கிறீர்கள். மக்கள் இதனால்தான் உங்களை நம்புகிறார்கள். தற்போது ஐசிசி ஹால் ஆப் ஃபேமில் இடம் பெற்று இருக்கிறீர்கள். ஒரு கிரிக்கெட் வீரருக்கு இதைவிட சிறந்த மரியாதை இருக்க முடியாது. இதுவரை விளையாடிய வீரர்களில் நீங்கள் சிறந்தவர்” என்று கூறி இருக்கிறார்.