தோனி ரெய்னா இல்லை.. எனக்கு மிகவும் பிடித்த அதிரடி பேட்ஸ்மேன் இவர்தான் – சிஎஸ்கே வீரர் கொடுத்த சர்ப்ரைஸ்

0
57

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக விலைக்கு வாங்கப்பட்ட இளம் வீரர் சமீர் ரிஸ்வி உள்நாட்டு கிரிக்கெட்டில் தனது திறமையை வெளிப்படுத்தும் விதமாக அதிரடியான ஆட்டத்தை விளையாடி வருகிறார்.

இந்த சூழ்நிலையில் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினாலும் தனது விருப்பமான வீரராக வேறு ஐபிஎல் அணியை சேர்ந்த வீரரை தேர்வு செய்து இருக்கிறார்.

- Advertisement -

அதிக தொகைக்கு வாங்கப்பட்ட இளம் வீரர்

இந்தியா உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் அதிரடியான விளையாட்டை வெளிப்படுத்தி வரும் இளம் வீரர் சமீர் ரிஸ்வி இவரது ஆக்ரோஷமான அதிரடி ஆட்டத்தை கண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஐபிஎல் ஏலத்தில் இவரை 8.4 கோடி ரூபாய்க்கு சென்னை அணிக்காக வாங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இவரை எதிர்கால சென்னை அணியில் நிரந்தர வீரராக இருப்பார் என்று கருத்தில் கொள்ளப்பட்டு பெரிய தொகைக்கு வாங்கியது.

இருப்பினும் கடந்த சீசன் அவருக்கு சிறப்பானதாக அமையவில்லை. 8 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 51 ரன்கள் மட்டுமே குவித்தார். இதனால் அடுத்து நடைபெறுகிற மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை தக்க வைக்குமா? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.இந்த சூழ்நிலையில் சமீபத்தில் இந்த சிஎஸ்கே வீரர் அளித்த ஒரு பேட்டியில் தனக்கு மிகவும் பிடித்த ஒரு பேட்ஸ்மேன் ஆக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை தேர்வு செய்து இருக்கிறார். அவரது அதிரடி பாணி தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக கூறி இருக்கிறார்.

- Advertisement -

இவர் பேட்டிங் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும்

இது குறித்து அவர் கூறும் போது “நான் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். என்னிடம் தாக்குதல் ஆட்டம் இருக்கிறது. இந்திய அணியில் ரோஹித் பையா ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரைப் போலவே எனக்கும் அதே வகையிலான விளையாடும் பாணி அமைந்திருக்கிறது. அதனால் எனக்கு அவருடைய பேட்டிங் ஸ்டைல் மிகவும் பிடிக்கும்.

இதையும் படிங்க:ரோஹித் இல்லனா பரவால்ல.. அவர தொந்தரவு செய்யாம .. இந்தப் பையனுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க – இந்திய முன்னாள் வீரர் பேட்டி

அவரது அணுகுமுறை மிகவும் அற்புதமாக இருக்கும். கடந்த உலக கோப்பையில் பார்த்தது போலவே அவரது ஸ்ட்ரைக் ரேட் எப்போதும் சிறப்பாக இருக்கும். அவர் நல்ல ஸ்டிரைக் ரேட் மற்றும் நல்ல நோக்கத்தோடு பேட்டிங் செய்கிறார். எனவே அவரிடம் எனக்கு இந்த குணம் மிகவும் பிடித்திருக்கிறது என்று சமீர் ரிஸ்வி கூறியிருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் நிலையில் அவர் ரெய்னா அல்லது தோனியின் பெயரை தேர்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரோகித் சர்மாவின் பெயரை தேர்ந்தெடுத்து இருப்பது சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -