ஒருத்தர் அடித்த சதம் எங்களை காப்பாற்றியது; இன்னொருத்தர் சதம் எங்களை கவிழ்த்தது! – டு பிளசிஸ் பேட்டி!

0
2345

விராட் கோலி அடித்த சதம் எங்களை மீண்டும் போட்டிக்குள் கொண்டு வந்தது. சுப்மன் கில் அடித்த சதம் எங்களை முழுமையாக போட்டியிலிருந்து வெளியேற்றிவிட்டது என்று பேசினார் டு பிளசிஸ்.

கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய போட்டியில் களமிறங்கிய ஆர்சிபி அணி குஜராத் அணிகெதிராக முதலில் பேட்டிங் செய்தது. விராட் கோலி அபாரமாக விளையாடி சதமடிக்க, 20 ஓவர்களில் 197 ரன்கள் குவித்தது ஆர்சிபி.

- Advertisement -

இதனை சேஸ் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு விஜய் சங்கர் 53 ரன்கள் அடித்து அவுட்டானார். இறுதிவரை அவுட்டாகாமல் களத்தில் நின்று 52 பந்துகளில் 104 ரன்கள் அடித்து போட்டியை பினிஷ் செய்துகொடுத்தார். குஜராத் அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

தோல்வியை தழுவியதால் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெறாமல் வெளியேறிய ஆர்சிபி அணியின் கேப்டன் பாப் டு பிளசிஸ் கூறுகையில்,

“இந்த முடிவு ஏமாற்றம் அளிக்கிறது. இன்றைய ஆட்டத்தில் நாங்கள் மிகவும் சிறப்பாக விளையாடினோம். ஆனால் சுப்மன் கில் அதைவிட சிறப்பாக விளையாடி சதம் அடித்துவிட்டார். இன்றைய ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்சில் ஈரப்பதம் அதிகமாகவே இருந்தது. முதல் இன்னிங்ஸிலும் ஈரப்பதம் இருந்தது. ஆனால் இரண்டாம் பாதியில் பந்தை கையில் பிடிக்க முடியாத அளவிற்கு இருந்தது. இதனால்தான் பந்தை அடிக்கடி மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

- Advertisement -

விராட் கோலி அடித்த சதம் இன்றைய போட்டியில் எங்களை ஆட்டத்திற்குள் கொண்டு வந்தது. அசாத்தியமாக பேட்டிங் செய்தார். அதேநேரம் சுப்மன் கில் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை எங்களிடமிருந்து எடுத்துச் சென்றுவிட்டார்.

இந்த சீசன் முழுவதும் எங்களது பேட்டிங்கை பொறுத்தவரை, முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் தொடர் முழுவதும் நன்றாக விளையாடினர். மிடில் ஆர்டரில் போதிய ரன்கள் வரவில்லை. அதேபோல் பவர்-பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை எடுத்தோம். ஆனால் மிடில் ஓவர்களில் போதிய அளவில் விக்கெட்டுகளை எடுக்காமல் மீண்டும் ஆட்டத்திற்கு வர முடியாமலும் போய்விட்டது.

விராட் கோலி இந்த சீசன் முழுவதுமே மிகச்சிறப்பாக விளையாடி இருக்கிறார். நானும் விராட் கோலியும் 40 ரன்களுக்கும் குறைவான பார்ட்னர்ஷிப் அமைத்த போட்டியை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால் டெத் ஓவர்களில் நாங்கள் சரியாக செயல்படவில்லை. கடந்த சீசனில் தினேஷ் கார்த்திக் அபாரமாக விளையாடி பினிஷிங் செய்துகொடுத்து வந்தார். இந்த சீசனில் அவருக்கு சரியாக எடுபடவில்லை. எதிர்பார்த்த ஃபார்மிலும் இல்லை.

வெற்றிகரமான அணியை பார்க்கும்பொழுது, அவர்களது அணியின் 5ஆவது 6ஆவது இடத்தில் சிறப்பான ஹிட்டர்கள் இருக்கின்றனர். அவர்கள் சிறப்பான பங்களிப்பையும் கொடுத்திருக்கின்றனர். எங்களுக்கு அந்த இடம் தொடர் முழுவதும் சரியாக அமையவில்லை.” என்றார்.