உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு விராட் கோலி கேப்டன் ? – ரவி சாஸ்திரி சர்ச்சை பேட்டி!

0
310

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகின்றன . மார்ச் 31ஆம் தேதி துவங்கிய இந்த போட்டிகள் வருகின்ற மே மாதம் 28ஆம் தேதி முடிவடைய இருக்கிறது .

இதனைத் தொடர்ந்து இந்திய அணி இங்கிலாந்து சென்று ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறது . இந்தப் போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் ஜூன் மாதம் ஏழாம் தேதி துவங்கி பதினொன்றாம் தேதி வரை நடைபெற இருக்கிறது .

- Advertisement -

இந்தப் போட்டி தொடர்களில் பங்கேற்கும் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்களின் விவரங்கள் இரண்டு அணியின் கிரிக்கெட் நிர்வாகத்தால் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டன . இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மனான அஜிங்கியா ரகானே நீண்ட நாட்களுக்குப் பிறகு அணிக்கு மீண்டும் திரும்பி இருக்கிறார் .

இந்நிலையில் இந்திய அணியின் தேர்வு மற்றும் வெற்றிக்கான வாய்ப்புகள் குறித்து கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும் வர்ணணையாளருமான ரவி சாஸ்திரி தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார் . மேலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் தன்னுடைய பணிக்காலத்தில் நடைபெற்ற சில விஷயங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார் .

இந்திய அணியின் தேர்வு பற்றி பேசிய ரவி சாஸ்திரி ” இந்தியா மிகச் சிறப்பான ஒரு அணியை தேர்ந்தெடுத்திருக்கிறது என கூறினார் . அணியின் முன்னணி வீரர்களான ஐயர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிசப் பண்ட் ஆகியோர் அணியில் இடம்பெறாத நிலையில் நல்ல திறமையான வீரர்களை கொண்ட ஒரு அணியை இந்தியா தேர்வு செய்து இருக்கிறது என அவர் தெரிவித்தார் .

- Advertisement -

வேணும் கடந்த காலத்தில் இந்திய அணியின் சில தவறுகளை சுட்டிக் காட்டிய ரவி சாஸ்திரி ” ரோகித் சர்மா காயமடைந்தால் விராட் கோலி தான் அணியை வழிநடத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன் . அப்படித்தான் ராகுல் ட்ராவிட் விரும்புவார் என்று நினைக்கிறேன் . கடந்த ஆண்டு இந்தியா இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்த போது நான் பயிற்சியாளராக இருந்திருந்தால் இறுதி டெஸ்ட் போட்டிக்கு விராட் கோலியை கேப்டனாக நியமித்திருக்க பரிந்துரை செய்திருப்பேன் . அதுதான் சரியான முடிவாக இருக்கும் என்று நான் கருதுகிறேன் . ஏனென்றால் 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தான் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருந்தது . மேலும் விராட் கோலி போன்ற ஒரு கேப்டனால் வீரர்களிடமிருந்து சிறந்த திறமையை வெளிக் கொண்டுவர முடியும்” என்று தெரிவித்தார்,

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு ரோகித் சர்மா முழு உடல் தகுதியுடன் இருப்பார் என்று கருதுகிறேன் . அவர்தான் அணியின் கேப்டன் . ஒருவேளை துரதிஷ்டவசமாக அவர் காயம் அடைந்து விட்டால் இந்திய அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருப்பது தான் சரியானது . நான் பயிற்சியாளராக இருந்தால் என்னுடைய முடிவும் அதுவாகத்தான் இருக்கும் என்று கூறினார் .