உலகக் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணி தன்னுடைய 34 வருட உலகக் கோப்பை பயணத்தில் இதுவரை ஒரு முறை கூட தொடரை கைப்பற்றியது கிடையாது. மேலும் கடைசியாக நடைபெற்ற டி20 உலக கோப்பையில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக இந்திய அணியில் யார் இருந்தது என்பது பற்றி இம்ரான் தாஹிர் பேசியிருக்கிறார்.
நடந்து முடிந்த டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி முதல் மூன்று விக்கெட்டுகளை வேகமாக இழந்துவிட்ட போதிலும் கூட, இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பொறுமையாக விளையாடிய 59 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். அதே சமயத்தில் இந்தத் தொடர் முழுக்க கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கில் சிறப்பாக விளையாடியிருந்தார்.
இன்னொரு பக்கத்தில் பந்துவீச்சை எடுத்துக் கொள்ளும் பொழுது பும்ரா, அர்ஸ்தீப் சிங் இருவரும் 32 விக்கெட் கைப்பற்றி இருந்தார்கள். மேலும் அக்சர் படேல் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் ஆல்ரவுண்டர்களாக பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மிகச் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருந்தார்கள்.
தற்பொழுது இதுகுறித்து பேசி இருக்கும் இம்ரான் தாஹிர் கூறும் பொழுது “ஒரு தென் ஆப்பிரிக்கராக, உலகக் கோப்பையில் எங்களுடைய வரலாறு மாறி இருந்தால் அது எங்களுடைய நாட்டில் ஒரு பாசிட்டிவான அதிர்வாக இருந்திருக்கும். இந்தியாவை விட தென் ஆப்பிரிக்காவுக்குதான் உலகக் கோப்பை மிகவும் முக்கியமானதாக இருந்தது. ஏனென்றால் ஏற்கனவே மூன்று உலகக் கோப்பைகளை கைப்பற்றி இருக்கிறது. ஆனால் கடைசி நேரத்தில் கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பாகச் செயல்பட்டார்.
விராட் கோலியை பொறுத்தவரையில் அவர் அழுத்தத்தில் சிறப்பாக செயல்படக்கூடிய வீரர். அவர் முதல் முறையாக இதைச் செய்யவில்லை. அவர் பெரிய போட்டிகளில் விளையாடும் பெரிய வீரர்.ஒவ்வொரு முறையும் அழுத்தத்தில் அதைச் செய்திருக்கிறார். 350, 400 முறை இப்படியானதை அவர் செய்திருக்கிறார்.
இதையும் படிங்க : ஸ்டோக்ஸ் உங்களோடது வேலைக்காகத டீம்.. நீங்க அப்படி பேசி இருக்க கூடாது – ஆஸி டிம் பெய்ன் விமர்சனம்
அவரால் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் ரன்கள் எடுக்க முடியும். இந்த இடத்தில் கேப்டன் மற்றும் அணி உடைய ஆதரவு அவருக்கு எப்படி இருந்தது என்றால், ஒருவேளை விராட் கோலி ரன்கள் எடுக்க வில்லை என்றாலும் கூட அதைப்பற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள் என்பதாக இருந்தது.விராட் கோலி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே சிறப்பாக விளையாடியிருக்கலாம், ஆனால் அந்த ஒரு போட்டிதான் இந்தியா டி20 உலகக்கோப்பையை வெல்ல உதவியது” என்று கூறியிருக்கிறார்.