ஸ்டோக்ஸ் உங்களோடது வேலைக்காகத டீம்.. நீங்க அப்படி பேசி இருக்க கூடாது – ஆஸி டிம் பெய்ன் விமர்சனம்

0
127
Paine

2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசஸ் டெஸ்ட் தொடர் குறித்தான குறும்படத்தில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேசிய ஒரு விஷயம் குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார். தற்பொழுது உலகக் கிரிக்கெட்டில் இந்த விவகாரம் பெரிய அளவில் சூடு பிடித்திருக்கிறது.

இந்திய அணிக்கு எதிராக கடந்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா அணி, அப்படியே தொடர்ச்சியாக இங்கிலாந்தில் அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஆசஸ் தொடரில் விளையாடியது. இந்தத் தொடர் 2-2 என சம நிலையில் முடிய, ஏற்கனவே கடந்த ஆசஸ் தொடரை வென்று இருந்த ஆஸ்திரேலியா தொடரைத் தக்க வைத்துக் கொண்டது.

- Advertisement -

அந்த குறிப்பிட்ட தொடரில் இங்கிலாந்து அணி முதலில் இரண்டு போட்டிகளை தோற்று விட்டது. இந்த நிலையில் மூன்றாவது போட்டியை வென்று, எளிதில் வெல்ல வேண்டிய நான்காவது போட்டி மழையின் காரணமாக டிரா ஆனது. மீண்டும் ஐந்தாவது போட்டியை வென்று இங்கிலாந்து தொடரை சமன் செய்தது.

இந்த நிலையில் 2023 ஆசஸ் தொடர் குறித்து தயாரிக்கப்பட்ட குறும்படத்தில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தாங்கள் விளையாடியதைப் பார்த்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள், மேலும் தாங்கள் விளையாடிய விதத்திற்காக மக்கள் என்றென்றும் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள் என்று கூறியிருந்தார். தற்பொழுது இதுதான் பெரிய சர்ச்சையாக மாறி வருகிறது.

- Advertisement -

இதுகுறித்து ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் டிம் பெயின் கூறும்போது “பென் ஸ்டோக்ஸ் தங்களுடைய டிரெஸ்ஸிங் ரூமில் பேசிய விஷயம் என்கின்ற காரணத்தினால் இந்த விஷயத்திற்கு அதிக முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது. அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை மாற்றுகிறார்கள் அற்புதமான விஷயங்களை செய்கிறார்கள் என்று தொடர்ந்து நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் அப்படி எதுவும் செய்யவில்லை.

இதையும் படிங்க : சர்வதேச ஓய்வு பெற்றிருந்தும்.. தோனியால் லெஜன்ட்ஸ் கிரிக்கெட் ஆட முடியாது.. காரணம் என்ன.?

தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இங்கிலாந்து கடைசி இடத்தில் இருக்கிறது. இவர்கள் நினைவில் வைத்துக் கொள்ளப்படும் ஒரு அணியாக இருக்கவே மாட்டார்கள். இதுவரை நாங்கள் பார்க்காத எதையும் இவர்கள் புதிதாக செய்துவிடவில்லை. பென் ஸ்ட்ரோக்ஸ் உங்களுடையது ஆவரேஜ் அணி. இப்பொழுது ஆவரேஜ்க்கும் கீழே உங்கள் அணி வந்துவிட்டது. இதை கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -