இந்திய கிரிக்கெட்

14000 ரன்.. உலகின் முதல் வீரராக கோலி சாதனை.. சச்சின் ரெக்கார்டு முறியடிப்பு.. சாம்பியன்ஸ் டிராபி.. முழு விபரம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன் டிராபி கிரிக்கெட் லீக் தொடரின் 5வது ஆட்டம் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.

- Advertisement -

இதில் இந்திய அணியின் விராட் கோலி தற்போது சச்சின் டெண்டுல்கரின் மெகா சாதனை ஒன்றை முறியடித்து இருக்கிறார்.

இந்தியா பாகிஸ்தான் ஒருநாள்

பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் விளையாடி வரும் நிலையில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை அதிகபட்சமாக சவுத் சகீல் 62 ரன்கள் குவித்தார். அதற்கு அடுத்ததாக கேப்டன் முகமது ரிஸ்வான் 42 ரன்கள் மற்றும் குஷ்தில் 38 ரன்கள் குவித்தார்கள்.

அதற்குப் பிறகு தற்போது இந்திய அணி விளையாடி வரும் நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா 20 ரன்கள் அடித்து வெளியேற, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் 46 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். தற்போது விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் விளையாடி வரும் நிலையில் விராட் கோலி தனது முதல் 15 ரன்கள் எடுத்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் அபாரமான சாதனையை முறியடித்திருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி சாதனை

அதாவது சச்சின் டெண்டுல்கர் 350 இன்னிங்ஸ்கள் விளையாடி 14000 ரன்கள் குவித்து சாதனை படைத்திருக்கும் நிலையில், அதனை விராட் கோலி 287 இன்னிங்ஸ்கள் மூலமாக 14000 குவித்து சச்சின் டெண்டுல்கரின் மெகா சாதனையை முறியடித்திருக்கிறார். மேலும் 300க்கும் குறைவான ஒரு நாள் இன்னிங்ஸ்களில் 14000 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற அற்புதமான சாதனையையும் படைத்திருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டை பொருத்தவரை இலங்கை அணியின் ஜாம்பவான் குமார் சங்ககாரா 14000 ரன்களுக்கும் அதிகமாக எடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க:9000 ரன்.. ரோகித் சர்மா படைத்த மெகா சாதனை.. இந்திய ஜாம்பவான் சச்சின் சாதனையை உடைத்து அபாரம்.. முழு விபரம்

அவர் இந்த சாதனையை 378 இன்னிங்ஸ்கள் விளையாடியதன் மூலமாக இந்த சாதனை படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடும் நிலையில் சற்று முன் வரை 36 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. இதில் விராட் கோலி 79 ரன்கள் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் 49 ரன்கள் உடன் களத்தில் இருக்கின்றனர்.

- Advertisement -
Published by

Recent Posts