விராட் கோலி 101 பந்துகளில் 131 ரன்கள் குவிப்பு.. லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சச்சினின் உலக சாதனை முறியடிப்பு

0
702

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு அணிக்கு திரும்பிய விராட் கோலி முதல் போட்டியிலே சதம் அடித்து அசத்திருக்கிறார். பெங்களூருவில் உள்ள பிசிசிஐயின் சிறப்பு மையத்தில் ஆந்திரா அணியை டெல்லி எதிர் கொண்டது.

இதில் விராட் கோலி டெல்லி அணிக்காக விளையாடினார். இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய ஆந்திரா அணியில் முன்னாள் சிஎஸ்கே வீரர் ஷேக் ரஷீத் 31 ரன்களும், ரிக்கிபியு 122 ரன்களும் எடுத்தனர். கேப்டன் நிதிஷ்குமார் ரெட்டி 23 ரன்களில் ஆட்டமிழக்க ஆந்திரா அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

விராட் கோலி சதம்:

இதனை அடுத்து களமிறங்கிய டெல்லி அணி தொடக்க வீரராக அதிரடியாக விளையாடியது. இளம் வீரர் பிரியன்ஸ் ஆர்யா ஏழு பவுண்டரி, 5 சிக்சர் என 44 பந்துகளில் 74 ரன்கள் குவித்து நல்ல அடித்தளத்தை அமைத்தார். மற்றொரு தொடக்க வீரரான அற்பித் ரானா டக் அவுட் ஆனார்.

இந்த சூழலில் விராட் கோலி களத்திற்கு வந்து அதிரடியை காட்டினார். சிறப்பாக விளையாடிய அவர் 101 பந்துகளில் 131 ரன்கள் குவித்தார். இதில் 14 பவுண்டர்களும் மூன்று சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் விராட் கோலி லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 16 ஆயிரம் ரன்களை தொட்ட வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.

- Advertisement -

சச்சின் சாதனை முறியடிப்பு:

இதற்கு முன்பு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்த ரெக்கார்டை 391 இன்னிங்ஸில் எட்டிய நிலையில் தற்போது விராட் கோலி 330-வது இன்னிங்ஸிலே எட்டி இருக்கிறார். இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களுக்கு பிறகு ஒவ்வொரு ஆயிரம் ரன்கள் மைல்கல்லை அதிவேகமாக தொட்ட வீரர் என்ற ரெக்கார்டை வைத்திருக்கின்றார்.

இதை பாருங்க: 62 பந்து.. ரோகித் சர்மா கலக்கல் சதம்.. இந்திய தேர்வுக் குழுவுக்கு இன்னொரு முறை சவால் – விஜய் ஹசாரே டிராபி 2025

இதேபோன்று லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கின்றார். சச்சின் டெண்டுல்கர் 60 சதம் அடித்துள்ள நிலையில், விராட் கோலி தற்போது 58 சதம் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்திய அணியில் விளையாட வேண்டும் என்றால் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என தேர்வு குழு வலியுறுத்திய நிலையில் தற்போது விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் சதம் அடித்து பதிலடி கொடுத்திருக்கின்றனர்.

- Advertisement -