இன்று நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் பிரமாண்ட சாதனை ஒன்றை விராட் கோலி முறியடித்திருக்கிறார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா இருவரும் விளையாடவில்லை. மேலும் நியூசிலாந்து தரம் ரச்சின் ரவீந்தரா மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் விளையாடவில்லை.
இதைத்தொடர்ந்து முதலில் விளையாட வந்த நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான பார்ட்னர் அமைத்து தந்தார்கள். முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 107 ரன்கள் வந்தது. டெவோன் கான்வே 67 பந்துகளில் 56 ரன்கள், ஹென்றி நிக்கோலர் 69 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.
இதைத்தொடர்ந்து மிடில் வரிசையில் டேரில் மிட்சல் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 71 பந்தில் 81 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் சேர்த்தது. இந்திய தரப்பில் முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா மற்றும் பிரசித் கிருஷ்ணா மூவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதற்கு அடுத்து பெரிய இலக்கை நோக்கி விளையாட வந்த இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 29 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஒரு முனையில் கேப்டன் பொறுமையாக விளையாடிக் கொண்டிருக்கிறார். இன்னொரு முறையில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 44 பந்துகளில் ஆறு பவுண்டரிகளுடன் அதிரடியாக அரை சதம் அடித்திருக்கிறார்.
இதையும் படிங்க : 27 வருடம் கழித்து நியூசிலாந்து சம்பவம்.. ஒரே மைதானத்தில் அரிய நிகழ்வு.. இந்திய அணி வெல்லுமா?
மேலும் இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 28000 ரன்கள் எடுத்தவராக சாதனை படைத்தார். இத்தொடர் அதிவேகமாக 28000 ரன்கள் எடுத்திருந்த சச்சின் சாதனையையும் விராட் கோலி முறியடித்திருக்கிறார். சச்சின் சர்வதேச கிரிக்கெட்டில் 28 ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு 644 இன்னிங்ஸ் எடுத்துக் கொண்டிருந்தார். விராட் கோலி 624 இன்னிங்ஸ்களில் இதைச் செய்திருக்கிறார்.