இன்று இந்திய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடி 27 வருடம் கழித்து முக்கியமான ஒரு சாதனையை படைத்திருக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். இந்திய அணியில் பேட்டிங் யூனிட்டில் ஆறாவது இடத்தில் இருந்து ஆல் ரவுண்டர்கள் இடம் பெற்றார்கள்.
அசத்தல் ஓபனிங் பார்ட்னர்ஷிப்
இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த நியூசிலாந்து அணிக்கு முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 107 ரன்கள் வந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் கான்வே 67 பந்தில் 56 ரன்கள், ஹென்றி நிக்கோலஸ் 69 பந்தில் 62 ரன்கள் எடுத்தார்கள். இதற்கடுத்து வில் யங் 16, கிளன் பிலிப்ஸ் 12, மிட்சல் ஹே 18, கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.
ஒருமுனையில் நிலைத்து நின்று விளையாடிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் 71 பந்துகளில் 5 பவுண்டர்கள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 81 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் குவித்தது.
அரிய சம்பவம்
இந்த போட்டியில் நியூசிலாந்து அணிக்கு தொடக்க விக்கெட் பார்ட்னர்ஷிப் 107 ரன்கள் வந்தது. 27 வருடங்கள் கழித்து இந்திய அணிக்கு எதிராக இந்தியாவில் வைத்து முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 100 ரன்கள் தாண்டி நியூசிலாந்து இந்த போட்டியில் எடுத்திருக்கிறது.
இதையும் படிங்க : ரிட்டையர்டு ஆயிட்ட ஆளுங்க சொல்றத பத்தி கவலைப்பட மாட்டேன்.. கிப்ஸ் கருத்துக்கு பிரவீஸ் பதிலடி
மேலும் 27 வருடங்களுக்கு முன்பாக 1999 ஆம் ஆண்டு தற்போது போட்டி நடைபெற்று வரும் ராஜ்கோட் மைதானத்தில் தான் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக நியூசிலாந்து எடுத்திருந்தது. தற்போது மீண்டும் அதே மைதானத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. மேலும் இரவில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் இந்திய அணி இந்த இலக்கை விரட்டி வெற்றி பெற முடியும்.






