விராட் கோலியா? பாபர் ஆஸமா? – புஜாரா வெளிப்படையான பதில்!

0
69
Pujara

ஒரே ஒரு கிரிக்கெட் தொடர், அதில் இரு நாடுகள் மோதும் ஒரே ஒரு போட்டி உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களை தாண்டி கிரிக்கெட் அணிகளையும் எதிர்பார்ப்பில் வைத்திருக்கிறது என்றால், அது ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி தான்.

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு இந்தப் போட்டி நடைபெறுவதால், ஆசிய அணிகளைப் பற்றி மற்ற அணிகள் தெரிந்து கொள்ளவும், ஆசிய கோப்பையில் விளையாடும் அணிகள் தங்களைத் தாங்களே ஒரு அணியாக பரிசோதித்துக் கொள்ளவும் இந்தத் தொடர் முக்கியமானதாக கருதப்படுகிறது.

- Advertisement -

மேலும் இந்தியா பாகிஸ்தான் என்றாலே இரு நாடுகள் மோதிக்கொள்ளும் போட்டிக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எப்பொழுதும் இருக்கும். ஆனால் தற்போது இதில் சற்று கூடுதல் சுவாரசியமாக கோலியா பாபரா என்று ஒரு ஒப்பீடு உள்ளீடாக போய்க்கொண்டு இருக்கிறது. இது மட்டுமல்லாமல் கடந்த 2, 3 ஆண்டுகளாக ரன் மெஷின் கோலியின் பேட்டிங் பார்ம் மோசமாக இருக்கிறது. இதனால் அவர் மீண்டும் ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் திரும்பி வருவாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

இப்படி ஒரு தொடரில் ஒரு ஆட்டத்திற்கான சுவாரஸ்ய விஷயங்கள் எக்கச்சக்கமாக இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டிக்குள் அடங்கியிருக்கிறது. இந்தக் காரணங்களால் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டமும் உலக அளவில் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது.

தற்போது விராட் கோலி பாபரா என்ற கேள்வி, இங்கிலாந்து உள்நாட்டு தொடரில் சசக்ஸ் அணிக்காக கலக்கி வரும் இந்திய டெஸ்ட் அணி வீரர் புஜாரா வரை போயிருக்கிறது. அவர் இதற்கான பதிலை நேர்மையான முறையிலேயே சொல்லியும் இருக்கிறார்.

- Advertisement -

அவரிடம் இது குறித்து கேட்கப்பட்ட பொழுது ” வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால் எங்கள் அணிக்காக விராட் கோலி அடித்த ரன்கள் நிறைய உண்டு. ஆனால் பாபர் ஆசம் சிறப்பான பேட்டிங் பார்மில் இருக்கிறார். அவரது விக்கெட்டை வீழ்த்த நாங்கள் மிகக் கடுமையாக உழைக்க வேண்டும். அவர் இருந்த விதத்தில் மிகச் சிறப்பாக செயல்படுகிறார் அவர் மிகச் சிறப்பான வீரர் ” என்று பாபருக்கு அதிகப்படியான ஆதரவோடு புஜாரா கருத்து தெரிவித்து இருக்கிறார்.

இன்று இரவு 7.30 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இடையே ஆசிய கோப்பையில் 2-வது போட்டி துவங்க இருக்கிறது. இதற்கான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒரு மணி நேரம் முன்னதாக ஆரம்பிக்கப்படும். போட்டிக்கான டாஸ் இரவு 7 மணிக்கு போடப்படுகிறது!