ரோஹித் – ராகுல் வந்தப் பிறகு மிடில் ஆர்டரில் ஆடப்போவது அகர்வாலா அல்லது ஷுப்மன் கில்லா ? விராட் கோஹ்லி வெளிப்படை பேச்சு

0
279
Gill Mayank Agarwal and Virat Kohli

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரச்சின் ரவீந்திராவின் சிறப்பான ஆட்டத்தால் டிரா ஆனது. எளிமையாக இந்திய அணி வெற்றி பெறும் என்று நினைத்தபோது இவர் சிறப்பாக விளையாடி டிரா செய்ய வைத்தார். இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஓய்வு முடிந்தது இந்த ஆட்டத்திற்கு கேப்டனாக அணிக்கு திரும்பினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சதம் எதுவும் அடிக்காமல் இருக்கும் விராட் கோலி இந்த முறை அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் இந்த நிலையில் சர்ச்சைக்குரிய முறையில் அவர் அவுட் ஆனார். மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி சதம் கடந்தார். நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் இந்திய அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஒரு இன்னிங்சில் எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற சாதனையை படைத்தார். பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி வெறும் 62 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மீண்டும் நியூசிலாந்து அணியின் அஜாஸ் பட்டேல் 4 விக்கெட்டுகளை இரண்டாவது இன்னிங்சில் வீழ்த்த இந்திய அணி 274 ரன்களுக்கு தனது இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. நியூஸிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்சில் மிச்சல் தவிர யாரும் சிறப்பாக விளையாடததால் நியூசிலாந்து அணி 167 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 1 – 0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

- Advertisement -

இந்த ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்சில் வழக்கமாக துவக்க வீரராக களமிறங்கும் சுப்மன் கில் மூன்றாவது வீரராக களமிறங்கினார். புஜாரா தொடக்க வீரராக விளையாடினார். தென் ஆப்பிரிக்கா தொடருக்கு பயிற்சி எடுக்கும் விதமாக தான் இவ்வாறு விளையாடினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தற்போது விராட்கோலி திரும்பி விட்டதால் ஸ்ரேயாஸ் ஐந்தாவது வீரராக விளையாடி வருகிறார். தென் ஆப்பிரிக்கா தொடருக்கு மிடில் ஆர்டரில் விளையாடப் போகும் வீரர் யார் என்ற கேள்விக்கு அது ஒருவர் எடுக்க வேண்டிய முடிவு அல்ல என்றும் கூட்டாக அமர்ந்து தீர்மானிக்கப்பட வேண்டிய முடிவு என்றும் அவர் கூறினார். நாங்கள் கலந்து பேசி அந்த இடத்திற்கு சிறப்பான வீரரை விளையாட வைப்போம் என்றும் கேப்டன் கோலி கூறியுள்ளார். மிகவும் கடினமான தென் ஆப்பிரிக்கா தொடரில் மிடில் ஆர்டரில் விளையாடப் போகும் வீரர் யார் என்பதை அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.