கோலி செய்த ஒரு காரியம்.. உணர்ச்சி பிழம்பாய் கொந்தளித்த வான்கடே.. 10 உலகக்கோப்பை வெற்றிக்கு சமம்

0
1617
Virat

ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக்கோப்பை தொடரை வென்று வந்த இந்திய அணிக்கு பாராட்டு விழாவும், உலகக் கோப்பை வெற்றி விழாவும் மும்பை வான்கடை மைதானத்தில் இன்று இரவு நடைபெற்று முடிந்தது. இந்த விழாவின் இறுதிக்கட்டத்தில் விராட் கோலி செய்த ஒரு செயல், பார்ப்பவர்கள் அனைவரையும் உணர்ச்சிப் பிழம்பாய் மாற்றியது.

இன்று மும்பை வான்கடே மரெயின் டிரைவில் இந்திய அணியின் வெற்றி ஊர்வலம் கூறப்பட்டது. அங்கிருந்து அந்த ஊர்வலம் மும்பை வான்கடே மைதானத்தில் முடிவுக்கு வந்தது. மைதானத்தில் இருந்த மொத்த ரசிகர்களின் முன்னிலையில் இந்திய வீரர்கள் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டார்கள்.

- Advertisement -

இந்த நிகழ்வில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, மேலும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் மேடையில் பேசினார்கள். இதில் பலரும் டி20 உலகக் கோப்பை வெற்றி குறித்து தங்களுடைய உணர்வுகளை பகிர்ந்து கொண்டார்கள்.

மேலும் இந்த நிகழ்வு அனைத்தும் முடிவடைந்த பிறகு, டிசிசிஐ இந்திய கிரிக்கெட் அணிக்கு அறிவித்திருந்த மெகா பரிசான 125 கோடி ரூபாய் பரிசு தொகையை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. கிரிக்கெட் உலகில் இதுவரையில் எந்த ஒரு அணி நிர்வாகமும் இவ்வளவு பெரிய பரிசுத்தொகையை கொடுத்தது கிடையாது. மேலும் ஐசிசி அமைப்பு கூட இவ்வளவு பரிசுத் தொகையை அளித்தது இல்லை. இந்திய கிரிக்கெட் வாரியம் தன்னுடைய பலம் என்னவென்பதை இதன் மூலமாக உலகக் கிரிக்கெட்டுக்கு வெளிப்படுத்தியது.

- Advertisement -

இதற்கு அடுத்து இந்திய வீரர்கள் அனைவரும் மைதானத்தைச் சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கடைசி நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வின் பொழுது ஏ ஆர் ரகுமான் இசையமைத்து பாடிய வந்தே மாதரம் பாடல் இந்தியில் ஒலித்தது. இந்த நேரத்தில் விராட் கோலி ஒட்டுமொத்த மைதானமும் தங்களுடன் இணைந்து அந்த பாடலைப் பாடும்படி கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க : மில்லருக்கு அந்த பிளான்தான் போட்டோம்.. ஆனா ஹர்திக் சூர்யா வேற லெவல்ல பண்ணிட்டாங்க – ரோகித் சர்மா பேட்டி

விராட் கோலியின் வேண்டுகோளை ஏற்ற ரசிகர்கள் அனைவரும் ஒரே குரலில் வந்தே மாதரம் பாடலை பாட, மைதானம் உணர்ச்சித் தீப்பிழம்பாய் இருந்தது. அங்கு இருந்தவர்களுக்கு மட்டும் அல்லாமல் அந்த வீடியோவை பார்க்கக் கூடியவர்களுக்கும், அது மிகப்பெரிய தேசப்பற்றை வெளியில் கொண்டு வரும் விஷயமாகவும் இருந்தது. ரசிகர்களின் கடலில் மிதந்து வந்த வெற்றி விழா, இறுதியாக தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக, அனைவரையும் மயிற்கூச்செறிய வைத்து முடிந்திருக்கிறது. இந்திய கிரிக்கெட்டில் இன்று ஒரு முக்கியமான நாளாக அமைந்திருக்கிறது!

- Advertisement -