மில்லருக்கு அந்த பிளான்தான் போட்டோம்.. ஆனா ஹர்திக் சூர்யா வேற லெவல்ல பண்ணிட்டாங்க – ரோகித் சர்மா பேட்டி

0
16548
Rohit

நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரை ரோகித் சர்மா தலைமையில் வென்ற இந்திய அணியின் வெற்றி கொண்டாட்டம் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்திய கேப்டன் ரோஹித் சர்மா இந்த நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்டியாவை மிகவும் புகழ்ந்து பேச, மைதானத்தில் மிக நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெற்றன.

இந்த உலகக் கோப்பை தொடரை இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு 30 பந்துகளில் 30 ரன்கள் தேவை என்கின்ற நிலையில், அவர்களிடம் கைவசம் ஐந்து விக்கெட்டுகள் இருந்த பொழுதிலும், கடைசி ஐந்து ஓவரில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி உலகக்கோப்பை தொடரைக் கைப்பற்றியது.

- Advertisement -

இந்திய அணியின் இந்த வெற்றியில் ஹர்திக் பாண்டியாவின் கடைசி கட்ட பந்துவீச்சு மிக முக்கிய பங்கைக் கொண்டு இருக்கிறது. கடைசியில் அவர் கைப்பற்றிய மூன்று விக்கெட்டுகள் இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றுவதற்கு காரணமாக அமைந்தது. இந்த வெற்றி இந்திய அணிக்கு மட்டும் அல்லாமல் தனிப்பட்ட முறையில் ஹர்திக் பாண்டியாவுக்கு மிகப்பெரிய அவசியமாக இருந்தது.

இன்று நிகழ்ச்சி நடந்த அதே மும்பை வான்கடே மைதானத்தில் ரசிகர்களால் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கூச்சல் எழுப்பப்பட்டது. ஆனால் இன்று ரோகித் சர்மா ஹர்திக் பாண்டியா பெயரை சொன்னதும், மைதானத்தில் இருந்த எல்லா ரசிகர்களும் ஹர்திக் ஹர்திக் என அவர் பெயரை உரக்க கத்தி அவரை பாராட்டினார்கள். ரோஹித் சர்மாவும் ரசிகர்களும் அவரை பாராட்ட, ஹர்திக் பாண்டியா கண்களில் கண்ணீர் வர எழுந்து நின்று அந்தப் பாராட்டை ஏற்றுக்கொண்டார்.

- Advertisement -

இந்த நிகழ்வில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேசும்பொழுது “ஹர்திக் எங்களுக்கு மிகவும் முக்கியமான கடைசி ஓவரை வீசினார். எத்தனை ரன்களை பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து தெரியும். ஆனால் எல்லாம் தாண்டி அந்த ஓவர் மிகுந்த அழுத்தமானது. அவருக்கு என் பாராட்டுகளை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரில் லாங் ஆனில் இருந்தேன். சூர்யா லாங் ஆப்பில் இருந்தார். காற்று ஒரு பக்கமாக வீசியது. காற்றுக்கு எதிர் திசையில் மில்லரை நாங்கள் வைக்க வேண்டும் என்று நினைப்போம். பந்து காற்றில் ஏறியதும் கடந்து விடும் என்று நினைத்தேன். ஆனால் அப்படி நடக்காததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். சூர்யா எடுத்த கேட்ச் விதிவிலக்காக இருந்தது. அவர் இதற்காக நிறைய பயிற்சி செய்து இருக்கிறார். அந்த நேரத்தில் அந்த இடத்தில் அப்படிப்பட்ட ஒரு கேட்ச் எடுப்பது மிகவும் கடினமானது.

இதையும் படிங்க : கோலி ரோகித்த தொடர்ந்து என் ஓய்வு எப்போது?.. நான் இந்த வகையில பெரிய அதிர்ஷ்டசாலி – பும்ரா பேச்சு

மும்பை மக்கள் வரவேற்பதில் எப்பொழுதுமே ஏமாற்ற மாட்டார்கள். எங்களுக்கு மிகவும் அருமையான வரவேற்பு கிடைத்தது. அணியின் சார்பில் ரசிகர்களுக்கு நான் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இப்பொழுது இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -