வீரர்களை விளையாட சொன்ன நீங்கள், உள்ளூர் போட்டியை நேரில் பார்க்கிறீர்களா? அகர்கரை வெளுக்கும் ரசிகர்கள்

0
40

இந்திய சீனியர் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக அஜித் அகர்கர், பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். தலைமைத் தேர்வாளராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் செய்த மிக முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று, தேசிய அணியில் இடம்பெறாத போது இந்திய வீரர்கள் தங்கள் மாநில அணிகளுக்காக உள்நாட்டுப் போட்டிகளில் கட்டாயம் விளையாட வேண்டும் என்ற விதியை அமல்படுத்தியது.

நட்சத்திர பேட்ஸ்மேன்கள் இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் இதை செய்யவில்லை என்பதால் ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் அகர்கரே உள்நாட்டுப் போட்டிகளை நேரில் பார்க்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னாள் மும்பை வீரரான அகர்கர் கடைசியாக ரஞ்சி போட்டியை நேரில் பார்த்தது 2024-25 சீசனில் கர்நாடகா, தமிழ்நாடு ஆட்டத்தின் போதுதான்.

- Advertisement -

போட்டியை பார்ப்பதில்லை:

அந்த ஆட்டத்தில் 151 ரன்கள் எடுத்த தேவ்தத் படிக்கலை அவர் இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்தார். அதைத் தவிர, உள்நாட்டுப் போட்டிகளை அகர்கர் நேரில் சென்று பார்த்ததே இல்லை. இதன் விளைவுகளும் மோசமாகவே தெரிகிறது.

  வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக மட்டுமே தற்போது இந்தியா வென்றுள்ளது. நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் தோல்வி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி, இங்கிலாந்தில் டிரா, தென்னாப்பிரிக்காவிடம் தோல்வி என இந்தியா தோல்வியை தழுவி வருகிறது. இது கம்பீர், அகர்கர் கூட்டணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

வாய்ப்பு மறுப்பு:

சர்பராஸ் கான், அபிமன்யு ஈஸ்வரன் போன்ற திறமையான வீரர்களைப் புறக்கணித்து, சாய் சுதர்ஷனுக்கு சுமாரான செயல்பாட்டுக்கு பிறகு  நம்பர் 3 இடத்தில் அவர்களைத் தேர்வு செய்யாததற்கு அகர்கரும் சம அளவில் பொறுப்பேற்க வேண்டும். தேர்வாளர்கள் உள்நாட்டுப் போட்டிகளை நேரில் பார்க்காமல் இருப்பது குறித்து  பேசிய ஒரு மூத்த பி.சி.சி.ஐ அதிகாரி, “தேர்வாளர்களுடன் டெஸ்ட் தோல்வி பற்றி பேசுவோம். உள்நாட்டு ஆட்டங்கள் பார்க்க வேண்டும் என்று கூறினார்.

இதையும் படிங்க:ஆஷஸ் 2025.. 2வது டெஸ்ட் ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு.. முக்கிய வீரர் இல்லாததால் சோகம்

ஆனால் இது அகர்கருக்கு முதல்முறை சர்ச்சை அல்ல. மும்பை தேர்வுக்குழுத் தலைவராக இருந்த போதும் உள்ளூர் போட்டிகளை போதிய அளவு பார்க்காததால் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானார். இறுதியில் ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டார். தற்போது அதே தவறை மீண்டும் அகார் செய்வதால் அவரை பதவி விட்டு நீக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

- Advertisement -