இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ள நிலையில் இதற்கான இந்திய அணி சில நாட்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. முதல் டெஸ்ட் போட்டி 22ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹசி சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
மோசமான பார்மில் விராட் கோலி ரோஹித் சர்மா
இந்திய அணி சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதற்கு முன்னதாக இந்திய அணி இப்படி ஒரு ஒயிட் பாஸ் தோல்வியை சந்திக்காத நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்வி இந்திய வீரர்களை மனரீதியாக சற்று அழுத்தத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். அதிலும் குறிப்பாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் மிக மோசமாக இருந்தது.
இந்திய அணியின் மிக முக்கிய வீரர்களாக கருதப்படும் இவர்கள் இருவரும் ரன்கள் குவிக்காத நிலையில், அது இந்திய அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் விராட் கோலி குறித்து ரிக்கி பாண்டிங் மோசமான விமர்சனத்தை தெரிவித்திருந்த நிலையில் அதற்கு கௌதம் கம்பீர் பதிலடி கொடுத்திருந்தார். மேலும் தற்போது ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹஸி விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
நான் ஆதரவளிக்கிறேன் – மைக்கேல் ஹசி
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் எந்த நிலையில் இருக்கிறார்கள், திறமை ரீதியாகவும் நல்ல நிலையில் இருக்கிறார்களா என்பதை கண்டறிவோம்.இந்த விஷயத்தால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் நிறைய மக்களை கவரக்கூடியவர்களாகவும், திறமை ரீதியாகவும் சிறப்பான நிலையில் இருக்கின்றனர். ரோஹித் மற்றும் கோலி ரன்கள் எடுக்காதது குறித்து கம்பீர் பேசுவதை நாங்கள் கேட்டோம்.
இதையும் படிங்க:244 ரன்.. சச்சின் சாதனையை உடைத்த குர்பாஸ்.. ஆப்கான் பங்களாதேஷ் அணியை வென்று தொடரை கைப்பற்றியது
நீங்கள் செய்யக்கூடிய முட்டாள்தனமான விஷயம் என்னவென்றால் சாம்பியன் வீரர்களை நீக்குவதுதான். கடந்த காலத்தில் நாம் பலமுறை இதை பார்த்து இருக்கிறோம். அவர்கள் விமர்சனத்திற்கு ஆளாவார்கள் ஆனால் வெளியே வந்து சிறப்பாக செயல்படக்கூடிய நிலையில் இருப்பார்கள். எனவே அவர்கள் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்பட நான் ஆதரவளிக்கிறேன். அவர்கள் பெருமைக்குரிய இந்தியர்கள் மற்றும் டெஸ்ட் வீரர்கள். ஆனால் ஆஸ்திரேலியா சிறப்பாக தொடங்கும் என்று நான் உணர்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.