244 ரன்.. சச்சின் சாதனையை உடைத்த குர்பாஸ்.. ஆப்கான் பங்களாதேஷ் அணியை வென்று தொடரை கைப்பற்றியது

0
1833
Gurbaz

தற்பொழுது சார்ஜாவில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.

ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஷார்ஜாவில் விளையாடின. இதில் முதலில் நடைபெற்ற இரண்டு போட்டியில் இரண்டு அணிகளும் ஒரு போட்டியை வென்று தொடர் சமநிலையில் இருந்தது. இந்த நிலையில் மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியது.

- Advertisement -

பங்களாதேஷை கரை சேர்த்த மெகதி ஹசன் மற்றும் மகமதுல்லாஹ்

இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 51 பந்துகளில் 53 ரன்கள் வந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தன்ஷித் ஹசன் 29 பந்தில் 19 ரன்கள், சௌமியா சர்க்கார் 23 பந்தில் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். இதைத் தொடர்ந்து பங்களாதேஷ் விக்க்கெட் சரிந்தது.

இதற்கு அடுத்தது மெஹதி ஹசன் 119 பந்தில் 66 ரன்கள், மகமதுல்லாஹ் 98 பந்தில் 98 ரன்கள் என 188 பந்தில் 145 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். பங்களாதேஷ் 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியின் தரப்பில் ஓமர்சாய் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

சச்சின் சாதனையை முறியடித்த குர்பாஸ்

இதைத்தொடர்ந்து களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு ஒரு முனையில் தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். இவர் ஓமர்சாய் உடன் இணைந்து 111 பந்தில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 120 பந்துகளை சந்தித்த குர்பாஸ் ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்களுடன் 101 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதைத் தொடர்ந்து ஆட்டம் இழக்காமல் அசமத்துல்லா ஓமர்சாய் 77 பந்தில் 70 ரன்கள், முகமது நபி 27 பந்தில் 34 ரன்கள் எடுத்தார்கள். ஆப்கானிஸ்தான் அணி 48.2 ஓவரில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் தொடரையும் இரண்டுக்கு ஒன்று என கைப்பற்றியது. மேலும் இந்த சதத்தின் மூலம் 22 வயதில் அதிக சதங்கள் அடுத்தவர்கள் பட்டியலில் சச்சினை தாண்டி குர்பாஸ் இரண்டாவது இடம் பிடித்தார்.

இதையும் படிங்க : சையது முஸ்தாக் அலி டிராபி.. 17 பேர் கொண்ட மாஸான தமிழக அணி அறிவிப்பு.. கலக்கப்போகும் நட்சத்திர வீரர்கள்

22 வருடம் 312 நாட்கள் – குயின்டன் டி காக்
22 வருடம் 349 நாட்கள் – ரஹ்மனுல்லா குர்பாஸ்
22 வருடம் 357 நாட்கள் – சச்சின் டெண்டுல்கர்
23 வருடம் 027 நாட்கள் – விராட் கோலி
23 வருடம் 280 நாட்கள் – பாபர் ஆசம்

- Advertisement -