கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

தோனியிடம் உங்களுக்கு பிடித்த விசயம் என்ன? மனம் திறந்த விராட் கோலி, ரோகித், ஜாஸ் பட்லர்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியிடம் பிடித்த விசயம் என்ன என்பது குறித்து விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய கோலி, அழுத்தமான சூழல்களில் அமைதியாக இருக்கும் திறனையும் பற்றி பாராட்டினார்.

- Advertisement -

“தோனியின் மிகப்பெரிய திறன், கடினமான தருணங்களில் அமைதியை பராமரிப்பது. அதனால்தான் அவர் மிகச்சிறந்தவர், ஏனெனில் அழுத்தமான சூழல்களில் சரியான முடிவுகளை எடுக்க முடிகிறது. அவர் எப்போதும் அமைதியாகவும், பதற்றம் இல்லாமலும் இருக்கிறார். இது அவருக்கு மிக முக்கியமான முடிவுகளை எடுக்க உதவுகிறது.

இளம் வீரர்களின் நண்பன்:

அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். நான் இந்திய அணியில் நுழைந்தபோது, அவர் எனது கேப்டனாக இருந்தார். அவர் எப்போதும் எனது கேப்டனாக இருப்பார்,” என்று கோலி கூறினார். இதனை தொடர்ந்து பேசிய ரோகித் ஷர்மா, 2021 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையின்போது, தோனி இந்திய அணியின் அதிகாரப்பூர்வ ஆலோசகராக இருந்தபோது, அவரது டிரஸ்ஸிங் ரூம் இருப்பைப் பற்றி நினைவு கூர்ந்தார்.

“எனது பார்வையில், 2007இல் நான் அவரது தலைமையில் உலகக் கோப்பையில் அறிமுகமானேன். அதன்பிறகு, நாங்கள் நீண்ட பயணத்தை ஒன்றாக மேற்கொண்டு, நிறைய கிரிக்கெட் ஆடினோம். இளம் வீரர்களுடன் இணைந்து, அவர்களை ஊக்குவிக்கும் தோனியின் திறன், மிகவும் சிறப்பு வாய்ந்தது. அவர் எப்போதும் ஒரு வீரரைச் சுற்றி அமைதியான சூழலை உருவாக்க முயல்கிறார்.

- Advertisement -

என்னுடைய ரோல் மாடல்:

இதனால் அவர்கள் பாதுகாப்பின்மை உணர மாட்டார்கள். இது மிகவும் முக்கியமான பண்பு என்று நான் நம்புகிறேன்.” என்று ரோகித் கூறினார். இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் ஜோஸ் பட்லர், தோனி தனது இளமைப் பருவத்தில் தனது முன்மாதிரியாக இருந்ததாகவும், தான் தோனியின் மிகப்பெரிய ரசிகன் என்றும் கூறினார்.”விக்கெட் கீப்பராக, அவர் எனது இளமைப் பருவத்தில் எனது முன்மாதிரியாக இருந்தார்.மிஸ்டர் கூல்’.

இதையும் படிங்க: கம்பீர் பற்றி இனி யாரும் வாய் திறக்க கூடாது.. யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் கருத்து

மைதானத்தில் அவரது ஆளுமையை நான் எப்போதும் விரும்பினேன்; அவர் பேட்டிங் செய்யும்போது மிகவும் அமைதியாகவும், கட்டுப்பாட்டுடனும் இருக்கிறார். அவரது கைகள் மின்னல் வேகத்தில் செயல்படுகின்றன, மேலும் ஆட்டத்தை ஆழமாக எடுத்துச் செல்ல அவர் விரும்புகிறார். அவரது தனித்துவமான பாணி, அவரை கிரிக்கெட்டின் சிறந்த தூதராக ஆக்குகிறது. நான் தோனியின் மிகப்பெரிய ரசிகன்,” என்று பட்லர் கூறினார்.

- Advertisement -
Published by