சுப்மன் கில் இந்தியாவின் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு, ரோஹித் சர்மா இந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது பெரும் விவாதங்களைத் தூண்டியுள்ளது. 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்றுல், கோலி, ரோகித் இருவரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான வெள்ளைப் பந்து தொடருக்கான இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டன. இதில் ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஐபிஎல் 2025 மே மாதத்தில் முடிவடைந்த பிறகு முதல் முறையாக தொழில்முறை கிரிக்கெட்டிற்குத் திரும்புகின்றனர். இருப்பினும், 2027-ல் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள அடுத்த உலகக் கோப்பை வரை தொடர்ந்து விளையாட வேண்டுமெனில், நீண்ட இடைவெளிகள் வழக்கமாகிவிடக் கூடாது என்று பதான் எச்சரித்தார்.
ரோகித் உழைக்கனும்:
இது குறித்து பேசிய அவர், “ரோஹித் மற்றும் விராட் 2027 உலகக் கோப்பையில் விளையாட விரும்புகிறார்கள். ஆனால் ஆட்ட உடற்தகுதி அவர்களுக்கு பெரிய சவாலாக இருக்கும். ரோஹித் தனது உடற்தகுதியில் நன்றாக உழைத்துள்ளார். அவர் அதில் கவனம் செலுத்துகிறார். ஆனால் வழக்கமான உடற்தகுதிக்கும், ஆட்ட நேர உடற்தகுதிக்கும் வித்தியாசம் உள்ளது.”
“தொடர்ந்து கிரிக்கெட் விளையாடாவிட்டால், இருவரும் ஆட்ட நேரத்தை உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டை விளையாட வேண்டும். அவர்கள் மிகப் பெரிய வீரர்கள், என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்களுக்கு உலக அளவிலான அனுபவம் உள்ளது.”
உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுங்கள்:
“ஆனால் அவர்கள் டி20 போட்டிகளில் கூட விளையாடவில்லை. எனவே பெரிய உலகக் கோப்பைக்கு முன்பு அவர்கள் விளையாடும் சில போட்டிகளுக்கு இடையே பெரிய இடைவெளிகள் இருக்கும். அதற்கு அவர்களுக்கு தொடர்ச்சியான ஆட்ட நேரம் தேவைப்படும். அதன் மூலமே 2027 உலகக் கோப்பையில் விளையாடும் அவர்களின் கனவு நனவாகும்” .
இதையும் படிங்க: ஆஸ்திரேலிய மண்ணில் இந்த 25 வயது வீரர் சாதிப்பார்.. தேர்வுக்குழு புத்திசாலித்தனமாக முடிவு எடுத்துள்ளனர்.. டிவில்லியர்ஸ் கருத்து
“தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கில் இப்போது இரு வடிவங்களிலும் தலைமை தாங்குவார். இது ஒரு பெரிய வாய்ப்பு. ஆனால் மிகப்பெரிய பொறுப்பும் கூட. விராட்டின் டெஸ்ட் கிரிக்கெட் , ரோஹித்தின் வெள்ளைப் பந்து கிரிக்கெட் மகத்துவத்தை அவர் முன்னெடுக்க வேண்டும். இது அவருக்கு சவாலான, உற்சாகமான கட்டமாகும்.
ஏனெனில் அவர் ஏற்கனவே நன்றாக பேட்டிங் செய்கிறார். அந்த ஃபார்மை அவர் தக்கவைக்க வேண்டும்.” என்று இர்பான் பதான் தெரிவித்தார்.






