தற்போது நடைபெற்று வரும் இந்திய உள்நாட்டு ஒருநாள் தொடர் விஜய் ஹசாரே டிராபியில் இருந்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா வெளியேறுகிறார்கள்.
நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு இவர்கள் இருவரும் இந்த தொடரில் பங்கேற்று இரண்டு போட்டிகளில் விளையாடினார்கள். விராட் கோலி ஒரு சதம் மற்றும் அரை சதம் அடிக்க, ரோகித் சர்மா ஒரு சதம் மற்றும் கோல்டன் டக் ஆனார்.
நியூசிலாந்து ஒருநாள் தொடர்
இதற்கடுத்து இந்திய அணி ஜனவரி 11ஆம் தேதி முதல் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இதற்கு அடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது.
தற்போது உள்நாட்டு தொடரில் சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் வீடு திரும்பி இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இதைத்தொடர்ந்து இவர்கள் இருவரும் அடுத்து நியூசிலாந்து தொடருக்கு வருவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
காரணம் என்ன?
இந்திய கிரிக்கெட் வாரியம் 2 நட்சத்திர வீரர்களை உள்நாட்டு போட்டியில் விளையாடும் படி ஏற்கனவே கேட்டுக் கொண்டிருந்தது. முதலில் ரோகித் சர்மா இதற்கு சம்மதித்திருந்தார். ஆனால் இதில் விருப்பம் இல்லாமல் இருந்து வந்த விராட் கோலி இதற்கு சம்மதம் தெரிவிக்காமல் இருந்தார்.
இதையும் படிங்க : இந்தியாவே இப்போ பலவீனமான அணி.. அதை வீழ்த்திட்டு ஆசஸ் தொடருக்கு போனா இப்படித்தான்.. இங்கி அணியை விமர்சித்த முன்னாள் கேப்டன்
இதைத்தொடர்ந்து முதல் இரண்டு போட்டிகளில் மட்டும் விளையாடுவதாக விராட் கோலி இறுதியாக சம்மதம் தெரிவித்தார். இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சம்மதித்தது. மேலும் ரோகித் சர்மாவையும் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாட கேட்டுக் கொண்டது. இதைத்தொடர்ந்து இரண்டு போட்டிகளில் இருவரும் விளையாடிவிட்டதால் தற்போது திரும்பி இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.






